Monday, October 4, 2021

அன்று இன்று

 

அன்று இன்று

அன்று*
ஒரு அறை உள்ள வீட்டில் ஐந்து பத்து பேர் ஒன்றாக வாழ்ந்தோம்

*இன்று*
ஐந்து பத்து அறை உள்ள வீட்டில் ஒருவர் இருவர் மட்டும் வாழ்கிறோம்

*அன்று*
ஆயிரம் பேருக்கு உதவி செய்தவன் யாரிடமும் விளம்பரம் இல்லாமல் வாழ்ந்தார்

*இன்று*
ஒரு நபருக்கு உதவி செய்தவனை ஆயிரம் பேர் தெரிந்து கொள்கிறார்கள்

*அன்று*
வயறு நிரப்புவதற்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து வேலைக்கு சென்றோம்

*இன்று*
வயறு குறைப்பதற்காக பல கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி செய்கிறோம்

*அன்று*
வாழ்வதற்காக சாப்பிட்டோம்

*இன்று*
சாப்பிடுவதற்காக வாழ்கிறோம்

*அன்று* வீட்டிற்குள் உணவருந்திவிட்டு கழிவறையை வெளியே பயன்படுத்தினோம்

*இன்று*
வெளியே உணவருந்திவிட்டு கழிவறையை வீட்டுக்குள் பயன்படுத்துகிறோம்

*அன்று*
மானம் காப்பதற்காக உடை அணிந்தோம்

*இன்று*
மானத்தை வெளியுலகத்திற்கு காட்டுவதற்காக உடை அணிகிறோம்

*அன்று*
கிழிந்த ஆடைகளை தைத்து பயன்படுத்தினோம்

*இன்று*
தைத்த ஆடைகளை கிழித்து பயன்படுத்துகிறோம்

*அன்று*
இருப்பதை வைத்து பண்டிகை காலத்தை கொண்டாடினோம்

*இன்று*
பண்டிகைக்கு ஏற்றது போல் கொண்டாடுகிறோம்

*அன்று*
ஆசிரியரிடமிருந்து உதை வாங்காமல் இருக்க மாணவர்கள் ஆண்டவனை வேண்டினார்கள்

*இன்று*
மாணவர்களிடமிருந்து உதை வாங்காமல் இருக்க ஆசிரியர்கள் ஆண்டவனை வேண்டுகிறார்கள்

*நாம் கடந்து வந்த பாதை திரும்பிப் பார்ப்பதற்கு 40 வயதை கடந்த நம்மால் மட்டுமே முடியும்*

Friday, October 1, 2021

நேரங்கள்

 

புத்தகங்களுடன் செலவழிக்கும் நேரங்கள்...
நம்மை வெளிச்சத்திற்கு இட்டுச்செல்லும்...

நண்பர்களுடன் செலவழிக்கும் நேரங்கள்....
கவலைகளை நம்மிடமிருந்து விரட்டி விடும்.

மனைவி / கணவனோடு செலவழிக்கும் நேரங்கள்....
வாழ்க்கையை வசந்தமாக மாற்றும்.

குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரங்கள்...
நம்மையும் மழலையாக்கி மீண்டும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

பெற்றோருடன் செலவழிக்கும் நேரங்கள்...
தெய்வத்துடன் நம்மை சங்கமிக்க வைக்கும்.

ஆலயத்தில் செலவழிக்கும் நேரங்கள்...
மனத்தின் அழுக்குகளைப் போக்கி புனிதனாக்கும்.

விளையாட்டில் செலவழிக்கும் நேரங்கள்...
மனதையும், தேகத்தையும் ஒருசேர வலிமையாக்கும்.

போதையுடன் செலவழிக்கும் நேரங்கள்...
ஓசையின்றி நம்மை நரகத்திற்க்கு
இட்டுச்செல்லும்.

கற்பித்தலில் செலவழித்த நேரங்கள்...
வருங்காலத் தலைவர்களை உருவாக்க வைக்கும்.

உழைப்புடன் செலவழிக்கும் நேரங்கள்...
வியர்வைக்கு பரிசாக வெற்றியைத் தந்து உயர்த்திட வைக்கும்.

சோம்பலுடன் செலவழிக்கும் நேரங்கள்...
நம்மை வாழ்வின் இருளில் தள்ளிவிடும்.

○ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு நேரங்கள்.

○அவரவர் வாழ்வும்...
அவரவர் நேரங்களை செலவழிக்கும் விதங்களில் மாற்றம் உண்டு...

ஆம்,

நாம் நமது நேரங்களை எவ்வாறு செலவு செய்கிறோம் என்பதில் தான் நமது எதிர்காலம் இருக்கிறது.

ஒளி வீசும் பொழுதுகளில்
வெற்றிகள் நிறைந்த
இனிமையான வாழ்வும்,
வசந்தமும் வந்து குவியும் வண்ணம் நமது நேரம் அமையட்டும்....

 

Sunday, February 2, 2020

வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள்

வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக் காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.  
2. பிறரைக் காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்  
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.  

அடால்ஃப் ஹிட்லர்:
நீ வெற்றி பெற்றால்இ நீ பிறருக்கு நின்று கொண்டு விளக்கத் தேவையில்லை.
நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் 
கொண்டிருக்கக் கூடாது.  

ஆலன் ஸ்டிரைக்: 
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். 
அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.  

அன்னை தெரசா:
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை
என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.  
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் 
இருக்காது.  

பான்னி ப்ளேயர்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று
வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக 
அமைந்துள்ளது என்று பொருள்.  

லியோ டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக் கொள்ள
நினைப்பதில்லை.  

அப்ரஹாம் லிங்கன்:  
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் 
ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.  

சுவாமி விவேகானந்தர்.
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல்
முன் செல்கிறாயோஇ அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய். 


Monday, August 12, 2019

இருள் | தத்துவம்

வெளிச்சத்தின் குறைந்த அளவே இருள் ஆகும்  அதேபோல் குளிர் என்பது வெப்பத்தின் குறைந்த அளவே ஆகும் இதை சொன்னவர் ஓர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி அல்பிரட் ஐனின்ரின் ஆவார்

ஆனால் முன்னோர் இருளில்தான் அதிக சக்தி உள்ள என்பதை அறிந்துள்ளனர் என்பதற்கான விளக்கம் கீழே 

இருள்
இருள் தத்துவம்

இருள் என்பது சக்தியா? என்னும் கேள்வி பலருக்கும் ஏற்படலாம் ஆனால் அதுவே உண்மை.

நமது பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள், பால்வெளிகள் அனைத்தும் வெரும் 5% மட்டுமே உள்ளது. 

இருள் சக்தி தான் 68% பிரபஞ்சத்தில் உள்ளது. இருள் சக்தி தான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் இயக்குகிறது.

பால்வெளி மண்டலம் கீழே விழாமல் ஒருவித ஈர்ப்பு விசையால் சுற்றிக்கொண்டுள்ளது என்பது தெரியும் அந்த ஈர்ப்பு விசையைக் கொடுப்பது இருள் சக்தி தான். 
காற்றைப் போலவே நம்மைச் சுற்றியும் இருள் சக்தி தான் நிறைந்துள்ளது. 

இந்த இருள் சக்தி தான் நமக்கான ஆற்றலைக் கொடுக்கிறது. நமக்கான சக்தியைக் கொடுக்கிறது. 

இருள் சக்தியில் இருந்தே நமக்கு ஆற்றல் கிடைப்பதால் தான் தூக்கத்தை விழிப்புணர்வற்ற தியானம் என்று கூறுகிறோம். 

உங்ளை நீங்கள் சோதனை செய்து பாருங்கள். நீங்கள் ஒன்றை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டுமெனில் கண்களை மூடி சிந்தனை செய்வது ஏன்?

தியானம் செய்யும் போது கண்களை மூடி தியானம் செய்வது ஏன்?

சித்தர்கள் இருள் நிறைந்த குகைகளில் தியானம் செய்வது ஏன்?

Sunday, April 28, 2019

வாழ்க்கை தத்துவம் - பூமியில் நிம்மதி

இவ் உருண்டையான பூமியை எடுத்துக்கொண்டால் எங்கெ தொடங்கப்பட்டதே அதே இடத்திற்க்கு அவ்விடயம் திரும்பவும் வரும் என்பது உண்மை இதை விளங்கிக் கொண்டவர்கள் வாழ்க்கையில் நிம்மதி அடைகிறார்கள் .மற்றவர்கள் அலைந்து திரிகிறார்கள் .
ஆனால் பூமியில் உள்ள உயிரினங்களின் நடத்தையை எடுத்துக்கொண்டால், அவை ஒன்றை ஒன்று அடிமைப்படுத்துவதிலே காலத்தை கடத்துகின்றன.


அதிலும் மனிதன் என்பவன் மற்ற மனிதர்களை
  • பணம்
  • சாதி
  • கல்வித்தகமை
  • மதம்
  • அரசியல்
  • அதிகாரம்
  • பல இதிகாச கதைகள்
  • மூட நம்பிக்கை
போன்ற சில காரணங்களாலும் இவற்றை விட இடையில் சில குழுக்கள் உருவாகி மேற் கூறப்பட்ட காரணங்களை புறக்கணித்து  வேறு சில காரணங்களால் மனிதர்களை அடிமைப்படுத்தவும் முயற்ச்சிக்கின்றனர் இவர்களை தீவிரவாதிகள் என்றும் அல்லது வேறு ஏதேனும் பெயர்களால் அவர்களது வருகையை தடுக்கின்றனர். ஆனால் உண்மையாதெனில்

இவர்கள் அனைவரும் மனிதனை மாத்திரம் அன்றி அனைத்து உயிரனங்களையும் நிம்மதியாக  வாழ இவ்வையகத்தில் விட மாட்டார்கள்

இதற்கு காரணம் எடுக்கும் முடிவில் சேம்பல் தனத்திற்கே முன்னுரிமை கொடுப்பதாலே, எமது வாழ்க்கையின் நிம்மதியை இழந்து கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் நிம்மதி பெறவேண்டின் சந்திக்கும் ஒவ்வொரு விடயத்திலும்  தங்களது உண்மையான உழைப்பு இருப்பின் நிம்மதி தானாக வரும்.

Monday, December 10, 2018

கதிர்வீச்சு

கதிர்வீச்சு என்பது சக்தியின் ஓர் வடிவமாகும் உதாரணத்திற்கு சக்தியின் வடிவங்களாக ஒளி,ஒலி,வெப்பம்,மின்சாரம்,காந்தம் போன்றனவற்றை பாடசாலை படிப்பில் படித்திருக்கிறோம் ஆனால் கதிர்வீச்சு சம்பந்தமான அடிப்படை விளக்கங்களே நாம் அறிந்திருக்க வாய்புண்டு, இதன் சிறு விளக்கம் கீழே

2004.12.26 இன் பிற்பாடு சுனாமி பற்றிய அறிவும்  அதன் தாக்கம்,வீரியம் போன்ற பல வகையான  அனுபமும் கிடைத்துள்ளது.இன்னொரு முறை சுனாமி வந்தால் அதை எதிர்கொள்ள வேண்டிய சக்தியும் தொழிநுட்ப்ப வசதிகளும் உண்டு இச் சுனாமியானது இயற்கையாகவே உருவாவதாகும் ஆனால் மனிதனால் உருவாக்கப்படும் கதிரியல் சுனாமியானது (Radiation Tsunami) 5G தொழிநுட்பத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறது.

இது 2.0 படத்தில் குருவிகள் மற்றும் பறவைகள் கதிர்வீச்சு தாக்கத்தினால் அதன் சிந்தனை மையம் குழப்பப்பட்டு மரணிக்கின்றன அதற்கு காரணம் cellphone tower இல் பிறப்பிக்கப்படும் கதிர்வீச்சின் அளவின் அதிகரிப்பே காரணம் ,

கதிர்வீச்சில் இரண்டு வகை உண்டு

  1. அயனாக்கக் கதிர்வீச்சு (Ionizing Radiation)
  2. அயனாக்கக் அல்லாத கதிர்வீச்சு (Non Ionizing Radiation)
இதில் X-Ray எடுக்க,புற்றுநோய் மருத்துவம்,மருத்துவ உபகரணங்களை தொற்று நீக்க போன்றவற்றிக்கு அயனாக்கக்  கதிர்வீச்சு (Ionizing Radiation) பயன்படுகிறது.

தொலைகாட்சி,வானொலி,கையடக்க தொலைபேசி,மைக்றோவ்வேவ் அவண் என்பன அயனாக்கக் அல்லாத கதிர்வீச்சு (Non Ionizing Radiation) இல் தொழில்படுபவையாகும்.

இவ்விரு வகையான கதிர்வீச்சசால் பாதிக்கப்பட்ட மனிதனுக்கும் விலங்குகளுக்கும் மறுமீட்பு என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

கதீர்வீச்சை கண்டுபிடித்த மனிதனுக்கு பாராட்டுக்களும்,பரிசில்களும் ஆனால் இப் பூமியில் வாழும் மனிதக்கோ விலங்கினத்திற்கோ இதனால்  ஏற்படும் பாதிப்பை அறிந்திருந்தும் ஏன்? மனிதர்களாகிய எம்மால் இதை எதிர்க்கமுடியவில்லை 


கதிர்வீச்சு
கதிர்வீச்சு

இயற்கையை பாருங்கள் வின்வெளியில் இருந்துவரும் மிக சக்திவாய்ந்த கதிர்வீச்சினால் எம்மையும் பிற உயிாினங்களையும் பாதுகாக்க  இப் பூமிப்பந்தானது  பற்பல வாயுப்படைகளால் இக் கதிர்கள் ஊடருக்கும் போதே தடுக்கப்படுகின்றன ஆனால் அவற்றில் சில வகையான குறைந்தளவு தீங்கிளைக்கும் கதிர்வீச்சே இப்பூமியை வந்தடைகிறது.இவ் இயற்கை நடவடிக்கைகளில் ஏதோவொரு நன்மை இருக்குமே தவிர தீமை இருக்காது.

அறிவியல் முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு தனக்குத்தானே புதைகுழியை மனிதன் மறைமுகமாக தோன்டுகிறான் என்பது யாருக்கும் தெரிவதில்லை ஏனெனில் சோம்பலுக்கும் சொகுசு வாழ்க்கைக்கும் அடிமையாகுவதே ஆகும். 

ஆகவே கதிர்வீச்சென்பது நன்மை தருவதைக்காட்டிலும் அதிகமான தீங்கையே விளைவிக்கின்றது ,இதன் பாதிப்பானது பரம்பரையாக கடத்தப்படுவதனால் எமது எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல 

ALARA -As Low As Reasonably Achievable  என்பது எல்லா வகையான கதிரியல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைப்பிடிக்கவேண்டிய கொள்கையாகும்.இது மூன்று முக்கிய விடையங்களை கொண்டுள்ளது அவையாவன
  1. நேரம்- மிக குறைவான நேரத்தில் வேலையை முடித்தல்
  2. தூரம்- தூரம் கூடினால் தலைகீழ் வர்க்க சட்டம் (inverse square law )
  3. பாதுகாப்பு கவசம்- இதற்கு சுவரின் தடிப்பு , ஈயத்தால் செய்த கண்ணாடி, ஆடை என்பனவாகும்
ஆகவே விளிப்புடன் இருக்கவும் 

Wednesday, November 28, 2018

வெற்றி வழிகள்

ஒவ்வெரு மனிதனுக்கும் ஏதோவெரு துறையில் நாட்டம்  (விருப்பம்) அதிகமாக இருப்பது இயற்கையின் படைப்பாகும் .

ஆனால் எத்துறையிலும்  உள்ள உண்மையான விடயம் என்னவெனில் அதன் ஆழத்தினை அறிய மனிதனின் முதுமை,ஆயுள் மற்றும் பிற விடயங்கள் தடைக்கல்லாக இருக்கின்றன.

ஆகவே இளமையில் சில விடயங்களைில் கவனமாக இருப்பின் தான் தேர்ந்தெடுத்த துறையில் நிபுணத்துக்கப்பால் செல்லலாம் என்பது உண்மையே

இளமையில்  கவனமாக இருக்கவேண்டிய சில  விடயங்கள்  இவை வெற்றி வழிகள் ஆகும்


வெற்றி வழிகள்
வெற்றி வழிகள்
  1. மற்றவர்கள் உறக்கத்தில் உள்ள போது அக்கறை உடன் பாடம் படித்தல்
    1. அமைதியான சூழல்
    2. சிந்தனை சிதறாமல் ஒரு நிலையில் இருத்தல்
    3. ஞாபகத்திறன் அதிகரித்தல்.
  2. மற்றவர்கள் முடிவெடுப்பதில் தாமதமாகும் போது முடிவெடுங்கள்
    1. முடிவெடுக்கும் திறனை இயற்கையாகவெ வளர்க்கலாம்
    2. மற்றவர்களுக்கு ஓர் சவாலாக இருத்தல்
  3. பணத்தை சேமித்தல்
    1. மற்றவர்கள் பணத்தை வீண்விரயம் செய்து பின் தேவைப்படும் போது அல்லது முதுமை போது கஷ்டப்படுதலை தவிர்த்தல்
    2. பணத்தின் பெறுமதி அது இல்லாத போதுதான் தெரியும்
  4. அவதானமாக கேட்டல்
    1. மற்றவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் போது அதனை கவனமாக கேட்டு விளங்ஙிக்கொள்ளல்
  5. புன்னகை புரிதல்
    1. மற்றவர்களுக்க்கிடையிலான  உறவை புதுப்பித்தல்
    2. மன நிம்மதி அடைதல்
மேலும் பல  விடயங்கள் இருப்பினும் வெற்றியை அடைவதில் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும்



Sunday, November 11, 2018

பணக்காரன் ஏழை | தத்துவம்

பணக்காரன் ஏழை
பணக்காரன் ஏழை
சில நடைமுறைகளை ஆராய்ந்து பார்த்தால் ஏழைகள் பெரும்பாலும் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிக மிக அரிதாகவே காணப்படுகிறது இது சோம்பலினாலா அல்லது மூடநம்பிக்கையினாலா அல்லது வேறு ஏதும் காரணங்களால் ஏற்படுகின்றனவா என்பதை ஊகிக்கமுடியுமே தவிர சரியான முடிவு எது என்பது கேள்விக்குறியே?

ஆனால் பணம் என்னவே பணக்காரர்களிடம் தான் புரளுகிறது ஏழைகளிடம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது  .

பொதுவாக பணக்காரர்கள் எப்போதும் பணக்காரர்களாவும் ஏழைகளில்  ஆயிரத்தில் ஒருத்தன் மாத்திரமே பணக்காரணாக வரும் வாய்ப்புகிட்டுகிறது மற்றவர்கள் அனைவரும் ஏழைகளாகவே உள்ளனர் இதற்கு காரணம் என்ன? (இங்கு ஏழை என்பவர்களிடம் பணம் இருக்கும் ஏதேவெரு காரணத்தின் நிமிர்த்தம் அப் பணம் செலவழிந்து விடும் நாளைய செலவிற்கு  கடனையே உடல் உழைப்பையோ நம்பி இருப்பர்)

கீழே உள்ள படத்தை பாருங்கள் அதில் பணக்காரர்கள் என்றும் ஏழையின் வயிற்றிலே குறியாய் இருப்பர் ஆனால் வளரவிடமாட்டார்கள் ஆனால் ஏழைகள் எப்போதும் பணக்காரர்களுக்கு போஷாகு ஊட்டுபவர்களாக இருப்பர் ஆகவே ஏழை ஏழை தான் பணக்காரன் பணக்காரன் தான்

ஏழை பணக்காரன்
ஏழை ஏழை தான் பணக்காரன் பணக்காரன் தான்



சில நடைமுறை வித்தியாசங்கள் ஆராய்ந்து தரப்பட்டுள்ளது


ஏழைகள்
பணக்காரர்கள்
1.     அதிக நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுதல்
அதிக நேரத்தை புத்தகம் வாசித்தலில் செலவிடுதல்
2.    முயற்ச்சிக்கான பலனில் பொறுமைகாத்தல்
முயற்ச்சிக்கான பலனில் அக்கறை எடுத்தல்
3.    பணத்தை நேரத்திற்காக , சேமிப்புக்கா செலவிடல்
பணத்தை பெருக்குவதற்காக செலவிடுதலில் கண்ணும் கருத்துமாய் இருத்தல்
4.     மற்றவர்களை விமர்சிப்பதிலும் ,துர் அதிஷ்டத்திலும் அக்கறை
மற்றவர்களின் தோல்வியின் காரணத்தையும் ,அதிலிருந்து ஓர் அனுபவத்தை பெறல்
5.     எல்லா விடயமும் தெரியும் என்ற அகந்தை
அறிவு பூர்வமான முடிவு
6.     பணம் தான் எல்லாத்திற்கும் காரணம்
வறுமை ஏழ்மைக்கு காரணம்
7.     குலுக்குச் சீட்டு மனநிலை
செயல் மனநிலை

Friday, October 26, 2018

கெடும்

கெடும்


நமது வாழ்க்கையில் சில விடயங்களில் அக்கறை எடுப்போம் ஆனால்  வேறு ஒரு விடயத்தில் நாட்டம் செலுத்துவோம் இதனால் ஏற்படும்  கெடுதிகள் சில 
  • பாராத பயிரும் கெடும்
  • பாசத்தினால் பிள்ளை கெடும்
  • கேளாத கடனும் கெடும்
  • கேட்கும்போது உறவு கெடும்
  • தேடாத செல்வம் கெடும்
  • தெகிட்டினால் விருந்து கெடும்
  • ஓதாத கல்வி கெடும்
  • ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்
  • சேராத உறவும் கெடும்
  • சிற்றின்பன் பெயரும் கெடும்
  • நாடாத நட்பும் கெடும்
  • நயமில்லா சொல்லும் கெடும்
  • கண்டிக்காத பிள்ளை கெடும்
  • கடன்பட்டால் வாழ்வு கெடும்
  • பிரிவால் இன்பம் கெடும்
  • பணத்தால் அமைதி கெடும்
  • சினமிகுந்தால் அறமும் கெடும்
  • சிந்திக்காத செயலும் கெடும்
  • சோம்பினால் வளர்ச்சி கெடும்
  • சுயமில்லா வேலை கெடும்
  • மோகித்தால் முறைமை கெடும்
  • முறையற்ற உறவும் கெடும்
  • அச்சத்தால் வீரம் கெடும்
  • அறியாமையால் முடிவு கெடும்
  • உழுவாத நிலமும் கெடும்
  • உழைக்காத உடலும்  கெடும்
  • இறைக்காத கிணறும் கெடும்
  • இயற்கையழிக்கும் நாடும் கெடும்
  • இல்லாலில்லா வம்சம் கெடும்
  • இரக்கமில்லா மனிதம் கெடும்
  • தோகையினால் துறவு கெடும்
  • துணையில்லா வாழ்வு கெடும்
  • ஓய்வில்லா முதுமை கெடும்
  • ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்
  • அளவில்லா ஆசை கெடும்
  • அச்சப்படும் கோழை கெடும்
  • இலக்கில்லா பயணம் கெடும்
  • இச்சையினால் உள்ளம் கெடும்
  • உண்மையில்லா காதல் கெடும்
  • உணர்வில்லாத இனமும் கெடும்
  • செல்வம்போனால் சிறப்பு கெடும்
  • சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்
  • தூண்டாத திரியும் கெடும்
  • தூற்றிப்பேசும் உரையும் கெடும்
  • காய்க்காத மரமும் கெடும்
  • காடழிந்தால் மழையும் கெடும்
  • குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்
  • குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்
  • வசிக்காத வீடும் கெடும்
  • வறுமைவந்தால் எல்லாம் கெடும்
  • குளிக்காத மேனி கெடும்
  • குளிர்ந்துபோனால் உணவு கெடும்
  • பொய்யான அழகும் கெடும்
  • பொய்யுரைத்தால் புகழும் கெடும்
  • துடிப்பில்லா இளமை கெடும்
  • துவண்டிட்டால் வெற்றி கெடும்
  • தூங்காத இரவு கெடும்
  • தூங்கினால் பகலும் கெடும்
  • கவனமில்லா செயலும் கெடும்
  • கருத்தில்லா எழுத்தும் கெடும்

adw