Friday, July 12, 2013

சிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்

சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில்  ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?)

சிரிப்பு என்பது இதழ்கலாள் மறைக்கபட்ட சொர்க்கம்.
சிரித்தால்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள் - சிரிப்பின் தத்துவமாகும்.

சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித்தொடர்புள்ளது இதன் காரணமாக
  • சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும்
  • கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். 
  • சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி நேர் மறையான (Positive) எண்ணங்களை பரப்பும். 
  • சோக அலைகள் நம்மைச்சுற்றி எதிர் மறையான (Negative) எண்ணங்களை பரப்பும். 
ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்

அதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவுகோலாகவும் சிரிப்பு உள்ளது.

சிரிக்கும்போது விஞ்ஞான ‌அறிவியல் 


"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது.
இதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

சிரிப்பைபற்றி மேலும்,

  • சிரிப்பானது பல்வேறு சந்தர்ப்பங்களில் இயல்பாகவே அல்லது செயற்கையாகவே வெளிப்படக்கூடியதாகும்.
  • வைத்தியதுறையினரின் ஆராய்ச்சியால் உடலில் 300 வகையான தசைகள் சிரிக்கும்போது அசைகின்றன என்பதனையும்  மனமும் தேகாமும் சிரிக்கும் சந்தர்ப்பங்களில் புத்துணர்ச்சியும் , ஆரோக்கியமும்  பெறுகின்ற என்பதனையும் கண்டறிந்துள்ளனர்.
  • ஆய்வென்றின் படி ஓரு நாளைக்கு சராசரி மனிதன் 15 தடவைகளும் குழந்தைகள் கிட்டத்தட்ட 400 தடவைகளும் சிரிக்கின்றன.இதிலிருந்து மனிதனுடைய வயதிற்கேற்றவாறு சிரிப்பு குறைந்து கொண்டு போவதை அவதானிக்கமுடிகிறது.
  • சில மேற்குலக நாடுகளில் சிரிப்பதை ஒரு பயிற்சியாக மேற்கொள்கின்றனர் ( தமிழ் திரைப்படம்- "வசூல் ராஜா MBBS"  இல் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது)
  • சிரிப்பு என்பது சிநேகத்திற்கான முதல் தூதுவாகவும்.
  • மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமாகவும்.
  • இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவதுமாக சிரிப்பு உள்ளது சிரிப்பு.
  • அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்

சிரிப்பின் வகைகள்

  1. அசட்டு சிரிப்பு
  2. ஆணவ  சிரிப்பு
  3. ஏளனச்  சிரிப்பு
  4. சாககச்  சிரிப்பு
  5. நையாண்டி  சிரிப்பு
  6. புன்  சிரிப்பு (மனத்தின் மகிழ்ச்சி)
  7. மழலை  சிரிப்பு
  8. நகைச்சுவை  சிரிப்பு
  9. அச்சிதல்  சிரிப்பு
  10. தெய்வீகச் சிரிப்பு 
  11. புருவச் சிரிப்பு
  12. காதல் சிரிப்பு
  13. வில்லங்க சிரிப்பு
  14. ஏழையின் சிரிப்பு

சிரிப்பை தெரிவிக்கும் விதங்கள்

  • உதட்டின் மூலமாக சிரித்தல்
  • பற்கள் தெரியும்படியாக சிரித்தல்
  • பற்கள்,நாக்கு என்பன தெரியும்படியாக சத்தமாக  சிரித்தல்

சிரிப்பினால் வெளிப்படுத்தும் தகவல்கள்

அன்பு
மகிழ்ச்சி
அகம்பாவம்
செருக்கு
இறுமாப்பு
தற்பெருமை
அவமதிப்பு
புறக்கனிப்பு
வெறுப்பு

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்

  • வெற்றியில் சிரிப்பவன் வீரன்.
  • கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.
  • துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.
  • மகிமையில் சிரிப்பவன் மன்னன்.
  • விளையாமல் சிரிப்பவன் வீணன்.
  • இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.
  • மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.
  • மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.
  • கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.
  • ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.
  • தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.
  • நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.
  • ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.
  • கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.
  • கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.
  • இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.
  • நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.
  • தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி.
  • இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.
  • குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.
  • நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.
  • அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.
  • தற்பெருமையில் சிரிப்பவன் கோழை
  • சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்.
  • நிலை மறந்து சிரிப்பவள் காதலி.
  • காதலால் சிரிப்பவள் மனைவி.
  • அன்பால் சிரிப்பவள் அன்னை.

சிரிப்பு என்பது மனம் சம்பந்தபட்டதாகும்,
மனம் என்பது ஒரு விசுவாசமான சிறந்த வேலைக்காரன் என்றும் மோசமான எஜமானன் என்றும் சொல்வார்கள்.
எனவே  சிரிப்பின் போது மிகக் கவனமாக இருக்கவேண்டும் விசயம் தெரிந்தவர்கள் சிரிப்பை வைத்தே எடைபோட்டுவிடுவார்கள்.

சிரிப்பு
3 வயது குழந்தையின் சிரிப்பு

சிரிப்பைப்பற்றி தமிழ் அறிஞர்களின் கருத்து

  • திருவள்ளுவர்- துன்பம் வரும் வேளையிலே சிரிங்க. 
  • பொதுவுடைமைக் கவிஞர்-சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவா மனித ஜாதி
  • பாடலாசிரியர்: புலமைபித்தன் -சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.

சிரிப்பு பொன்மொழிகள்,பழமொழிகள் 

  • சிரிப்பு என்பதே மனிதரோடு மனிதரை  இழுத்துச் சேர்க்கும் ஒரு காந்தக் கல்!   -சேப்டஸ்பரி
  • ஆயிரம் வருத்தங்களின் பாரத்தை நீக்கக்கூடியது  ஒரே ஒரு இதயச் சிரிப்பாகும்.  இதற்கீடான பொருள் உலகத்தின்  எந்தச் சந்தையிலும் இல்லை. -லேம்ப்
  • சிரிப்பும்- அழுகையும் இரு மனைவியர்கள். ஒருத்தி  கொஞ்சிப் பேசினால் மற்றொருத்தி விலகி ஓடுவாள். -லீஹண்ட்
  • வாய் விட்டுச்  சிரிப்பது மட்டும்  நகைச்சுவையல்ல.  உள்ளம் கிழ்விக்கும் புன்முறுவல்  ஒரு கோடி தடவை  சிரிப்பதைவிட  உயர்ந்ததாகும். - ஸ்டர்னே
  • மனிதனுடைய இதயத்தைத் திறப்பது எது? அவனை அறியாமல் எழும் சிரிப்புத்தான் -கார்லைல்
  • மனிதன் சிரிக்கக்கூடிய நிலையில் இருக்கும் வரை அவன் ஏழையாக மாட்டான்.
  • Always laugh when you can.Its cheap medicine - Lord Byron
  • வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் 
  • " நகைச்சுவை உணர்வு எனக்கு இல்லாதிருந்தால், நான் நீண்ட நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்துகொண்டிருப்பேன்" -மகாத்மா காந்தி

உலக சிரிப்பு தினம்

ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால் சிரிப்புக்கென்றே  ஒரு தினம் இருப்பதுதான்.'உலக சிரிப்பு தினம்' ஆண்டுதோறும் மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. சிரிப்பின் வாயிலாக உலகில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த தினத்தின் நோக்கம்.
அதை விட உலகளவில் 65 நாடுகளல் சுமார் 6000 சிரிப்பு மன்றங்கள் இயங்கி வருகின்றன.

ஏழையின் சிரிப்பு
ஏழையின் சிரிப்பு

சிரிப்பு
சிரிப்பு

சிரித்து வாழவேண்டும் (சிரிப்பு) பாடல்

திரைப்படம்: ஆண்டவன் கட்டளை 
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் 
====================================================
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது



திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன் (1973)
இசை: M.S. விசுவநாதன்
பாடலாசிரியர்: புலமைபித்தன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

====================================================


சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

சிரிப்பு சம்பந்தமான மேலும் பல கருத்துக்களை  கீழேயுள்ள Comment boxன் ஊடாக வாசகர்களிடம் பகிரலாம்.
நன்றி

11 comments:

  1. சிரிப்பு மிக நன்றாக உள்ளது. உங்களுடைய மற்றைய பதிப்புக்களும் நன்றாகவும் வித்தியாசமானதாவும் உள்ளது

    ReplyDelete
  2. very good post for laughing and its types

    ReplyDelete
  3. சிரிப்பின் தன்மையினால் மனிதர்களின் பண்புகளை மிக மிக நன்றாகவுள்ளது இது நூற்றுக்கு நூறு வீதம் மிகச்சரியான உண்மையாகும் , உங்களுடைய முயற்சி பாராட்டத்தக்கவேண்டியதாகும்.

    ReplyDelete
  4. சிரிப்பின் வகைகள் are best.This post is some different than others post.சிரிப்பினால் வெளிப்படுத்தும் தகவல்கள் so so good

    ReplyDelete
  5. Really good work for sirippu and It said real value of laughing

    ReplyDelete
  6. சிரிப்பில் இத்தனை வகைகளா!
    அருமை அருமை

    ReplyDelete
  7. சிரிப்பு தகவல் சிறப்புங்க

    ReplyDelete
  8. Good is சிரிப்பு

    ReplyDelete
  9. சிரிப்பு சிரிப்பாக உள்ளது

    ReplyDelete
  10. வாய் விட்டு சிரிச்ச நோய் விட்டு போகும்
    குடும்பத்தில் சந்தோசம் வரும்.சக்திவேல் 😀

    ReplyDelete

adw