Saturday, March 2, 2013

பணம்

பணம் என்பது ஒரு அலகாகும் இதன் மதிப்பானது பொருட்களை அல்லது சேவைகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் நிர்ணயக்கப்படுகிறது.

அதனைத்தவிர  பணம் சொல்லும் நிதர்சனமான உண்மை

இன்று நீ என்னை காப்பாற்றினால் நாளை நான் உன்னை காப்பாற்றுவேன்
அதேநேரம் பணம் ஒரு சுயநலவாதி தான் ஏன் என்றால்

பணக்காரர்களிடம் உள்ள போது குட்டி போடுகிறது ஏழைகளிடம் உள்ளபோது வட்டி போடுகிறது ஏனெனில் பணத்திற்கும் சொகுசு வாழ்க்கையே தேவைப்படுகழறது



பணத்தைப்பற்றிய நிறைய பழமொழிகள் இருக்கின்றன. அவற்றில் சில

  • பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்
  • கடவுளின் தம்பி பணம்
  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்
  • குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
  • சுண்டைக்காய் காற்பணம் சுமைகூலி முக்காற் பணம்.
  • பணம் உண்டானால் மனம் உண்டு
  • பணம் என்னசெய்யும் பத்தும் செய்யும்.
  • கரி விற்றபணம் கறுப்பாய் இருக்குமா?
  • கள் விற்றுக் கால்பணம் சம்பாதிப்பதைவிட, கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்
  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
  • நிரம்பியிருக்கும் பணப்பைகளை விட காலியாக இருக்கும் பணபைகளே சுமையானது
  • பணம் - உள்ளவனை தூங்கவிடாது ஆனால் பணம் - இல்லாதவனை வாழவிடாது.
மேலே கூறப்பட்டுள்ள பழமொழிகளின் மூலம் பணத்தின் பெறுமதியை உணரலாம்.

ஆனால் பணத்தினால் எல்லாவற்றையும் பெறமுடியாது அவைகளானவை
  • பணத்தினால் மனதிற்குபிடித்த வீட்டை அமைக்கலாம் ஆனால் நல்ல இல்லத்தை அமைக்கமுடியாது
  • பணத்தினால் கடிகாரத்தை வாங்கலாம் ஆனால் காலத்தை வாங்கவே மாற்றவே முடியாது.
  • பணத்தினால் நல்ல படுக்கையை வாங்லாம் ஆனால் நல்ல தூக்கத்தை வாங்கமுடியாது
  • பணத்தினால் விருப்பமான புத்தகத்தை வாங்கலாம் ஆனால் அறிவை வாங்கமுடியாது
  • பணத்தினால் நல்ல கெட்டிக்கார வைத்தியரிடம் மருந்துகளை வாங்கலாம் ஆனால் நல்ல சுகத்தை வாங்கலாமா?
ஆகவே பணம் தான் வாழ்க்கை என்றிறாமல் இயற்கையுடன் சற்று சார்ந்திருப்பதனால் அன்றாட வாழ்க்கையானது மனநிம்மதியானதாவிருக்கும்

பணத்துக்கு கூறப்படும் வேறு பெயர்கள்

  • காசு
  • துட்டு
  • மணி


3 comments:

  1. பணம் தத்துவம் மிக அருமையாக உள்ளது. உங்களது மற்றைய படைப்புகளும் நன்றாக உள்ளது

    ReplyDelete
  2. Replies
    1. அருமை.,தொடருங்கள்.,வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.,

      Delete

adw