Friday, August 8, 2014

சிந்தனைகள்

செயல்களின் வடிவம் சிந்தனைகளில் இருந்து ஆரம்பிக்கின்றது இச்செயல்களிருந்து "நீ யார் ?"  என்பது மற்றவர்களுக்கு தெளிவாகிறது.

அதாவது "நான் யார்?" என்பது அவரவரின் செயல்களிருந்து வரையறுக்கப்படுகிறது.

இச்செயல்களுக்கு எண்ணங்கள் அல்லது சிந்தனைகள் ,காலம்(நாள் ,நேரம்)  என்பன அடிப்படை காரணங்களாக உள்ளது.

அதே‌ நேரத்தில் ஒவ்வொருவரின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஒரு போதும் ஒத்ததாக (சமமாக) இருப்பதில்லை (இறைவனின் விளையாட்டுக்களில் ஒன்றாக இருக்கலாம்)

மன நிலை நிபுணர்களின் ஆய்வின் பிரகாரம் எண்ணங்கள்/சிந்தனைகளுக்கு பிறப்பிடமாக அமைவது
  1. சுற்றுச் சூழல்
  2. நண்பர்களின் உறவு
  3. பெற்றேர்களின் கண்டிப்பு /அரவணைப்பு
  4. ஆசிரியர்/குரு
  5. பொறுப்புணர்ச்சி
  6. விபரீத ஆசைகள்
இவற்றில் மிக முக்கிய காரணமாக இருப்பது பெற்றேரின் ஆசை,

ஓவ்வொரு பெற்றேருக்கும் பெருமை சேர்ப்பது என்னவெனில் அவர்களின் பிள்ளைகளின் காலத்திற்கேற்ற செயல்களில்தான் ,
இதை அவர்கள் தமது சிறார்களுக்கு  மிகுந்த சிரமத்தின் மத்தியில் ,நல்ல சிந்தனைகளை ஊட்டி வளர்ப்பதன் மூலம் வெற்றியை அடைகிறார்கள்

எனவேதான்,
"விளையும் பயிரை முளையில் தெரியும்"  என்றார்கள் ,

சிந்தனைகள் பலவிதம்

  1. சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள்
  2. அப்துல் கலாமின் சிந்தனைகள்
  3. இராம கிருஷ்னரின் சிந்தனைகள்
  4. சோக்கிரடீஸ் சிந்தனைகள்
  5. ஆன்மீக சிந்தனைகள்

இப்படியாக பல சிந்தனைகளை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேம் ஆனால் ஒருபோதும் இவர்களின் சிந்தனைகளுக்க செயல்வடிவம் கொடுத்ததாக இதுவரைக்கும் எந்த தகவல்களும் இல்லை ஆனால் கேட்போம் வாசிப்போம் அல்லது பிறருக்கு கூறுவோம்.

ஏன் என்றால் இச்சிந்தனைகள் எல்லாம் அவர்களின் மனதிலிருந்து எண்ணங்களின் பிரதிபலிப்பாகும் நாம் அவற்றை பின்பற்றினால் ஒருபோதும் விவேகானந்தராகவே விபுலானந்தராகவே ஆகமுடியாது 

ஆனால் தமது பெற்றோரின் சிந்தனைகன் எப்போதும் பொய்ப்பதில்லை ஏனெனில் அது நமக்காகவே செதுக்கப்பட்டவையாகும்.

பெற்றேரின் சிந்தனைகள் எண்ணங்களை பின்பற்றினால் பிற்காலத்தில் "என்னை (நான் )" மற்றவர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள் .இதற்கு காலம் ஒரு வ‌ரையறையாக உள்ளது அதாவது "காலத்தை அறிந்து பயிர் செய் "என்றார்கள் முன்னோர்.

எண்ணங்களும் சிந்தனைகளும் வெளிப்படுவது காலத்தின் கையிலேதான் உள்ளது எனவே காலத்தின் அருமையை உணர்ந்து காலத்தை வீணடிக்காமல் ஏதே ஒரு விடயத்தில் பிரயோசணப்படுத்தினால் வாழ்க்கையில் என்றும் வசந்தமே!



கணிதமும் சிந்த‌னையும்

சிந்தனைகள்






No comments:

Post a Comment

adw