Monday, December 10, 2018

கதிர்வீச்சு

கதிர்வீச்சு என்பது சக்தியின் ஓர் வடிவமாகும் உதாரணத்திற்கு சக்தியின் வடிவங்களாக ஒளி,ஒலி,வெப்பம்,மின்சாரம்,காந்தம் போன்றனவற்றை பாடசாலை படிப்பில் படித்திருக்கிறோம் ஆனால் கதிர்வீச்சு சம்பந்தமான அடிப்படை விளக்கங்களே நாம் அறிந்திருக்க வாய்புண்டு, இதன் சிறு விளக்கம் கீழே

கதிர்வீச்சில் இரண்டு வகை உண்டு

 1. அயனாக்கக் கதிர்வீச்சு (Ionizing Radiation)
 2. அயனாக்கக் அல்லாத கதிர்வீச்சு (Non Ionizing Radiation)
இதில் X-Ray எடுக்க,புற்றுநோய் மருத்துவம்,மருத்துவ உபகரணங்களை தொற்று நீக்க போன்றவற்றிக்கு அயனாக்கக்  கதிர்வீச்சு (Ionizing Radiation) பயன்படுகிறது.

தொலைகாட்சி,வானொலி,கையடக்க தொலைபேசி,மைக்றோவ்வேவ் அவண் என்பன அயனாக்கக் அல்லாத கதிர்வீச்சு (Non Ionizing Radiation) இல் தொழில்படுபவையாகும்.

இவ்விரு வகையான கதிர்வீச்சசால் பாதிக்கப்பட்ட மனிதனுக்கும் விலங்குகளுக்கும் மறுமீட்பு என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

கதீர்வீச்சை கண்டுபிடித்த மனிதனுக்கு பாராட்டுக்களும்,பரிசில்களும் ஆனால் இப் பூமியில் வாழும் மனிதக்கோ விலங்கினத்திற்கோ இதனால்  ஏற்படும் பாதிப்பை அறிந்திருந்தும் ஏன்? மனிதர்களாகிய எம்மால் இதை எதிர்க்கமுடியவில்லை 


கதிர்வீச்சு
கதிர்வீச்சு

இயற்கையை பாருங்கள் வின்வெளியில் இருந்துவரும் மிக சக்திவாய்ந்த கதிர்வீச்சினால் எம்மையும் பிற உயிாினங்களையும் பாதுகாக்க  இப் பூமிப்பந்தானது  பற்பல வாயுப்படைகளால் இக் கதிர்கள் ஊடருக்கும் போதே தடுக்கப்படுகின்றன ஆனால் அவற்றில் சில வகையான குறைந்தளவு தீங்கிளைக்கும் கதிர்வீச்சே இப்பூமியை வந்தடைகிறது.இவ் இயற்கை நடவடிக்கைகளில் ஏதோவொரு நன்மை இருக்குமே தவிர தீமை இருக்காது.

அறிவியல் முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு தனக்குத்தானே புதைகுழியை மனிதன் மறைமுகமாக தோன்டுகிறான் என்பது யாருக்கும் தெரிவதில்லை ஏனெனில் சோம்பலுக்கும் சொகுசு வாழ்க்கைக்கும் அடிமையாகுவதே ஆகும். 

ஆகவே கதிர்வீச்சென்பது நன்மை தருவதைக்காட்டிலும் அதிகமான தீங்கையே விளைவிக்கின்றது ,இதன் பாதிப்பானது பரம்பரையாக கடத்தப்படுவதனால் எமது எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல 

ALARA -As Low As Reasonably Achievable  என்பது கதிரியல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைப்பிடிக்கவேண்டிய கொள்கையாகும்.இது மூன்று முக்கிய விடையங்களை கொண்டுள்ளது அவையாவன
 1. நேரம்- மிக குறைவான நேரத்தில் வேலையை முடித்தல்
 2. தூரம்- தூரம் கூடினால் தலைகீழ் வர்க்க சட்டம் (inverse square law )
 3. பாதுகாப்பு கவசம்- இதற்கு சுவரின் தடிப்பு , ஈயத்தால் செய்த கண்ணாடி, ஆடை என்பனவாகும்
ஆகவே விளிப்புடன் இருக்கவும் 

Wednesday, November 28, 2018

வெற்றி வழிகள்

ஒவ்வெரு மனிதனுக்கும் ஏதோவெரு துறையில் நாட்டம்  (விருப்பம்) அதிகமாக இருப்பது இயற்கையின் படைப்பாகும் .

ஆனால் எத்துறையிலும்  உள்ள உண்மையான விடயம் என்னவெனில் அதன் ஆழத்தினை அறிய மனிதனின் முதுமை,ஆயுள் மற்றும் பிற விடயங்கள் தடைக்கல்லாக இருக்கின்றன.

ஆகவே இளமையில் சில விடயங்களைில் கவனமாக இருப்பின் தான் தேர்ந்தெடுத்த துறையில் நிபுணத்துக்கப்பால் செல்லலாம் என்பது உண்மையே

இளமையில்  கவனமாக இருக்கவேண்டிய சில  விடயங்கள்  இவை வெற்றி வழிகள் ஆகும்


வெற்றி வழிகள்
வெற்றி வழிகள்
 1. மற்றவர்கள் உறக்கத்தில் உள்ள போது அக்கறை உடன் பாடம் படித்தல்
  1. அமைதியான சூழல்
  2. சிந்தனை சிதறாமல் ஒரு நிலையில் இருத்தல்
  3. ஞாபகத்திறன் அதிகரித்தல்.
 2. மற்றவர்கள் முடிவெடுப்பதில் தாமதமாகும் போது முடிவெடுங்கள்
  1. முடிவெடுக்கும் திறனை இயற்கையாகவெ வளர்க்கலாம்
  2. மற்றவர்களுக்கு ஓர் சவாலாக இருத்தல்
 3. பணத்தை சேமித்தல்
  1. மற்றவர்கள் பணத்தை வீண்விரயம் செய்து பின் தேவைப்படும் போது அல்லது முதுமை போது கஷ்டப்படுதலை தவிர்த்தல்
  2. பணத்தின் பெறுமதி அது இல்லாத போதுதான் தெரியும்
 4. அவதானமாக கேட்டல்
  1. மற்றவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் போது அதனை கவனமாக கேட்டு விளங்ஙிக்கொள்ளல்
 5. புன்னகை புரிதல்
  1. மற்றவர்களுக்க்கிடையிலான  உறவை புதுப்பித்தல்
  2. மன நிம்மதி அடைதல்
மேலும் பல  விடயங்கள் இருப்பினும் வெற்றியை அடைவதில் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும்Sunday, November 11, 2018

பணக்காரன் ஏழை | தத்துவம்

பணக்காரன் ஏழை
பணக்காரன் ஏழை
சில நடைமுறைகளை ஆராய்ந்து பார்த்தால் ஏழைகள் பெரும்பாலும் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிக மிக அரிதாகவே காணப்படுகிறது இது சோம்பலினாலா அல்லது மூடநம்பிக்கையினாலா அல்லது வேறு ஏதும் காரணங்களால் ஏற்படுகின்றனவா என்பதை ஊகிக்கமுடியுமே தவிர சரியான முடிவு எது என்பது கேள்விக்குறியே?

ஆனால் பணம் என்னவே பணக்காரர்களிடம் தான் புரளுகிறது ஏழைகளிடம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது  .


சில நடைமுறை வித்தியாசங்கள் ஆராய்ந்து தரப்பட்டுள்ளது


ஏழைகள்
பணக்காரர்கள்
1.     அதிக நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுதல்
அதிக நேரத்தை புத்தகம் வாசித்தலில் செலவிடுதல்
2.    முயற்ச்சிக்கான பலனில் பொறுமைகாத்தல்
முயற்ச்சிக்கான பலனில் அக்கறை எடுத்தல்
3.    பணத்தை நேரத்திற்காக , சேமிப்புக்கா செலவிடல்
பணத்தை பெருக்குவதற்காக செலவிடுதலில் கண்ணும் கருத்துமாய் இருத்தல்
4.     மற்றவர்களை விமர்சிப்பதிலும் ,துர் அதிஷ்டத்திலும் அக்கறை
மற்றவர்களின் தோல்வியின் காரணத்தையும் ,அதிலிருந்து ஓர் அனுபவத்தை பெறல்
5.     எல்லா விடயமும் தெரியும் என்ற அகந்தை
அறிவு பூர்வமான முடிவு
6.     பணம் தான் எல்லாத்திற்கும் காரணம்
வறுமை ஏழ்மைக்கு காரணம்
7.     குலுக்குச் சீட்டு மனநிலை
செயல் மனநிலை

Friday, October 26, 2018

கெடும்

கெடும்


நமது வாழ்க்கையில் சில விடயங்களில் அக்கறை எடுப்போம் ஆனால்  வேறு ஒரு விடயத்தில் நாட்டம் செலுத்துவோம் இதனால் ஏற்படும்  கெடுதிகள் சில 
 • பாராத பயிரும் கெடும்
 • பாசத்தினால் பிள்ளை கெடும்
 • கேளாத கடனும் கெடும்
 • கேட்கும்போது உறவு கெடும்
 • தேடாத செல்வம் கெடும்
 • தெகிட்டினால் விருந்து கெடும்
 • ஓதாத கல்வி கெடும்
 • ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்
 • சேராத உறவும் கெடும்
 • சிற்றின்பன் பெயரும் கெடும்
 • நாடாத நட்பும் கெடும்
 • நயமில்லா சொல்லும் கெடும்
 • கண்டிக்காத பிள்ளை கெடும்
 • கடன்பட்டால் வாழ்வு கெடும்
 • பிரிவால் இன்பம் கெடும்
 • பணத்தால் அமைதி கெடும்
 • சினமிகுந்தால் அறமும் கெடும்
 • சிந்திக்காத செயலும் கெடும்
 • சோம்பினால் வளர்ச்சி கெடும்
 • சுயமில்லா வேலை கெடும்
 • மோகித்தால் முறைமை கெடும்
 • முறையற்ற உறவும் கெடும்
 • அச்சத்தால் வீரம் கெடும்
 • அறியாமையால் முடிவு கெடும்
 • உழுவாத நிலமும் கெடும்
 • உழைக்காத உடலும்  கெடும்
 • இறைக்காத கிணறும் கெடும்
 • இயற்கையழிக்கும் நாடும் கெடும்
 • இல்லாலில்லா வம்சம் கெடும்
 • இரக்கமில்லா மனிதம் கெடும்
 • தோகையினால் துறவு கெடும்
 • துணையில்லா வாழ்வு கெடும்
 • ஓய்வில்லா முதுமை கெடும்
 • ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்
 • அளவில்லா ஆசை கெடும்
 • அச்சப்படும் கோழை கெடும்
 • இலக்கில்லா பயணம் கெடும்
 • இச்சையினால் உள்ளம் கெடும்
 • உண்மையில்லா காதல் கெடும்
 • உணர்வில்லாத இனமும் கெடும்
 • செல்வம்போனால் சிறப்பு கெடும்
 • சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்
 • தூண்டாத திரியும் கெடும்
 • தூற்றிப்பேசும் உரையும் கெடும்
 • காய்க்காத மரமும் கெடும்
 • காடழிந்தால் மழையும் கெடும்
 • குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்
 • குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்
 • வசிக்காத வீடும் கெடும்
 • வறுமைவந்தால் எல்லாம் கெடும்
 • குளிக்காத மேனி கெடும்
 • குளிர்ந்துபோனால் உணவு கெடும்
 • பொய்யான அழகும் கெடும்
 • பொய்யுரைத்தால் புகழும் கெடும்
 • துடிப்பில்லா இளமை கெடும்
 • துவண்டிட்டால் வெற்றி கெடும்
 • தூங்காத இரவு கெடும்
 • தூங்கினால் பகலும் கெடும்
 • கவனமில்லா செயலும் கெடும்
 • கருத்தில்லா எழுத்தும் கெடும்

Wednesday, October 10, 2018

எண் 7 - தத்துவம்

எண் 7


ரிஷிகள் ஏழு...

 • அகத்தியர், 
 • காசியபர், 
 • அத்திரி, 
 • பரத்வாஜர், 
 • வியாசர், 
 • கவுதமர், 
 • வசிஷ்டர்.

கன்னியர்கள் ஏழு...

 • பிராம்மி, 
 • மகேஸ்வரி, 
 • கௌமாரி,
 •  வைஷ்ணவி, 
 • வராகி, 
 • இந்திராணி, 
 • சாமுண்டி 

சஞ்சீவிகள் ஏழு...

 • அனுமன், 
 • விபீஷணர், 
 • மகாபலி சக்கரவர்த்தி, 
 • மார்க்கண்டேயர்,
 • வியாசர், 
 • பரசுராமர், 
 • அசுவத்தாமர்.

முக்கிய தலங்கள் ஏழு....

 • வாரணாசி,
 • அயோத்தி,
 • காஞ்சிபுரம்,
 • மதுரா,
 • துவாரகை,
 • உஜ்ஜைன்,
 • ஹரித்வார்.

நதிகள் ஏழு...

 • கங்கை, 
 • யமுனை, 
 • கோதாவரி, 
 • சரஸ்வதி, 
 • நர்மதா, 
 • சிந்து, 
 • காவிரி.

வானவில் நிறங்கள் ஏழு...

 • ஊதா, 
 • கருநீலம், 
 • நீலம், 
 • பச்சை, 
 • மஞ்சள், 
 • ஆரஞ்சு, 
 • சிவப்பு.  

நாட்கள் ஏழு...

 • திங்கள், 
 • செவ்வாய், 
 • புதன், 
 • வியாழன், 
 • வெள்ளி, 
 • சனி.
 • ஞாயிறு

கிரகங்கள் ஏழு...

 • சூரியன், 
 • சந்திரன், 
 • செவ்வாய், 
 • புதன், 
 • குரு, 
 • சுக்கிரன், 
 • சனி.

மலைகள் ஏழு...

 • இமயம்/கயிலை, 
 • மந்த்ரம், 
 • விந்தியம், 
 • நிடதம், 
 • ஹேமகூடம், 
 • நீலம், 
 • கந்தமாதனம்.

கடல்கள் ஏழு..

 • உவர் நீர், 
 • தேன்/மது, 
 • நன்னீர், 
 • பால், 
 • தயிர், 
 • நெய், 
 • கரும்புச் சாறு.

மழையின் வகைகள் ஏழு...

 • சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
 • ஆவர்த்தம் - நீர் மழை
 • புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை
 • சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
 • துரோணம் - மண் மழை
 • காளமுகி - கல் மழை
 • நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

பெண்களின் ஏழு பருவங்கள்...

 • பேதை,
 • பெதும்பை,
 • மங்கை,
 • மடந்தை,
 • அரிவை,
 • தெரிவை,
 • பேரிளம் பெண்.

ஆண்களின் ஏழு பருவங்கள்..

 • பாலன்,
 • மீளி,
 • மறவோன்,
 • திறவோன்,
 • விடலை
 • காளை,
 • முதுமகன்.

ஜென்மங்கள் ஏழு...

 • தேவர்,
 • மனிதர்,
 • விலங்கு,
 • பறவை,
 • ஊர்வன,
 • நீர்வாழ்வன,
 • தாவரம்.

தலைமுறைகள் ஏழு

 • நாம் - முதல் தலைமுறை 
 • தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை 
 • பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை 
 • பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை 
 • ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை 
 • சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை 
 • பரன் + பரை - ஏழாம் தலைமுறை.

கடை ஏழு வள்ளல்கள்..

 • பேகன், 
 • பாரி, 
 • காரி, 
 • ஆய்,
 • அதிகன், 
 • நள்ளி, 
 • ஓரி.

சக்கரங்கள் ஏழு...

 • மூலாதாரம், 
 • ஸ்வாதிஷ்டானம்,  
 • மணிபூரகம்,  
 • அனாஹதம், 
 • விஷுத்தி, 
 • ஆக்னா, 
 • சகஸ்ராரம். 

கொடிய பாவங்கள் ஏழு....

 • உழைப்பு இல்லாத செல்வம்,
 • மனசாட்சி இலாத மகிழ்ச்சி,
 • மனிதம் இல்லாத விஞ்ஞானம்,
 • பண்பு இல்லாத படிப்பறிவு,
 • கொள்கை இல்லாத அரசியல்,
 • நேர்மை இல்லாத வணிகம்,
 • சுயநலம் இல்லாத ஆன்மிகம்.

கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு...

 • ஆணவம், 
 • சினம், 
 • பொறாமை, 
 • காமம்,
 • பெருந்துனி, 
 • சோம்பல்,
 • பேராசை.

திருமணத்தின் போது அக்னியை சுற்றும்  அடிகள் ஏழு ...  

 • முதல் அடி.. பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.
 • இரண்டாம் அடி.. ஆரோக்கியமாக வாழ வேண்டும் 
 • மூன்றாம் அடி.. நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
 • நான்காவது அடி... சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.
 • ஐந்தாவது அடி....லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.
 • ஆறாவது அடி... நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.
 • ஏழாவது அடி... தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

adw