அன்று*
ஒரு அறை உள்ள வீட்டில் ஐந்து பத்து பேர் ஒன்றாக வாழ்ந்தோம்
*இன்று*
ஐந்து பத்து அறை உள்ள வீட்டில் ஒருவர் இருவர் மட்டும் வாழ்கிறோம்
*அன்று*
ஆயிரம் பேருக்கு உதவி செய்தவன் யாரிடமும் விளம்பரம் இல்லாமல் வாழ்ந்தார்
*இன்று*
ஒரு நபருக்கு உதவி செய்தவனை ஆயிரம் பேர் தெரிந்து கொள்கிறார்கள்
*அன்று*
வயறு நிரப்புவதற்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து வேலைக்கு சென்றோம்
*இன்று*
வயறு குறைப்பதற்காக பல கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி செய்கிறோம்
*அன்று*
வாழ்வதற்காக சாப்பிட்டோம்
*இன்று*
சாப்பிடுவதற்காக வாழ்கிறோம்
*அன்று* வீட்டிற்குள் உணவருந்திவிட்டு கழிவறையை வெளியே பயன்படுத்தினோம்
*இன்று*
வெளியே உணவருந்திவிட்டு கழிவறையை வீட்டுக்குள் பயன்படுத்துகிறோம்
*அன்று*
மானம் காப்பதற்காக உடை அணிந்தோம்
*இன்று*
மானத்தை வெளியுலகத்திற்கு காட்டுவதற்காக உடை அணிகிறோம்
*அன்று*
கிழிந்த ஆடைகளை தைத்து பயன்படுத்தினோம்
*இன்று*
தைத்த ஆடைகளை கிழித்து பயன்படுத்துகிறோம்
*அன்று*
இருப்பதை வைத்து பண்டிகை காலத்தை கொண்டாடினோம்
*இன்று*
பண்டிகைக்கு ஏற்றது போல் கொண்டாடுகிறோம்
*அன்று*
ஆசிரியரிடமிருந்து உதை வாங்காமல் இருக்க மாணவர்கள் ஆண்டவனை வேண்டினார்கள்
*இன்று*
மாணவர்களிடமிருந்து உதை வாங்காமல் இருக்க ஆசிரியர்கள் ஆண்டவனை வேண்டுகிறார்கள்
*நாம் கடந்து வந்த பாதை திரும்பிப் பார்ப்பதற்கு 40 வயதை கடந்த நம்மால் மட்டுமே முடியும்*
No comments:
Post a Comment