Skip to main content

மௌனம்

மௌனம் ஆறறிவுள்ள மனிதனால் மாத்திரம் கடைபிடிக்கப்படும் ஒரு செய்கையாகும் இதனால் மனக்கட்டுப்பாடு ஒர் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.அதே நேரத்தில் மௌனம்  கடைப்பிடிக்கப்படும் சந்தர்ப்பங்களைப்பொருத்து மௌனத்தின் பெறுமதியை நாம் விளங்கிக்கொள்ளலாம்.
கீழே சில உதாரணங்களைத் தருகிறேன்
 1. இன்பமான நேரங்களில் மௌனம் சம்மதம்
 2. நட்பில் மௌனம் நம்பிக்கை
 3. காதலில் மௌனம் சித்தரவதை
 4. வெற்றியில் மௌனம் அடக்கம்
 5. தேல்வியில் மௌனம் பெறுமை
 6. திட்டும்போது மௌனம் திட்டுபவரை பைத்தியமாக்குவது
 7. விருப்பமானவர் பிரியும் போது மௌனம் துக்கம்
 8. விருப்பமானவர் வெற்றிபெறும் போது மௌனம் மகிழ்ச்சி
 9. நாக்கின் கற்பு- மௌனம்
இப்படியாக மௌனத்தை விளக்கிக்கொண்டுபோகலாம் எனவே மௌனத்தின் வலிமையை எப்படிப்பட்டது என்று அறியலாம்

மௌனம் மிகச் சிறந்த பதில்தான்,
மென்மையான மொழிதான்,
பலராலும் திமிராகவே
கணிக்கப்படுகிறது !!!!!!   
Thanks newyarl.com


"மௌனத்தின் பெறுமதியை அறிந்தவர்களில் பெரும்பாலும் சித்தர்களே ஆவர் ,ஆனால் மௌனமாக வெகுநேரம் பயிற்சியின்றி சாதாரண எம்மால் இருக்கமுடியாது அதேநேரத்தில் வாயைமூடிக்கொண்டு கதைக்காமல் இருப்பது உண்மையான மௌனம் இல்லை.அதாவது அக,புற மனதினில் அமைதியுடன் அமைதியான முறையில் கடைபிடிக்கப்படும் மௌனமே மிகச்சிறந்ததாகும்"


 • ஒரு மனிதனைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதம்,அவனுக்கு பிடித்தவரின் மௌனம்தான்..... 

 • மௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கம் அளிக்கும்.கொடுமைக்கு உள்ளாகிறவனுக்கு ஊக்கமளிக்காது

 • அதே நேரத்தில் உன் மௌனத்தை சரியாக எவரால் மொழிபெயர்க்க முடியுமோ,அவருக்கு மட்டும் உன் மனதை படிக்கும் சக்தியுண்டு.

மௌனம்
மௌனம்


Separation

Comments

 1. மௌத்தின் இயல்புகளை வகைப்படுத்தியமைக்கு நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாழ்க்கை தத்துவம்

வாழ்கை தத்துவம் தற்போதுள்ள மனித அறிவின் படி ஒரே ஒரு தடவைதான் எமது வாழ்கையாகும்.இவ்வாழ்க்கையானது ஒரு குறுகிய காலப்பகுதியை வரையறையாக கொண்டுள்ளது.(ஒவ்வொரு மனிதனுக்குமான இக்கால அவகாசம் சமமாக இருப்பதில்லை) இக்கால இடைவெளிக்குள் , வாழ்க்கை என்றால் என்ன? ஏன் வாழவேண்டும்?ஏன் உறவுகளை மதிக்க வேண்டும்.?ஏன் உண்மையாக இருக்கவேண்டும்?யாரை முழுமையாக நம்புவது?ஏன் கோபம் வருகிறது? ஏன் சிந்திக்கின்றோம்?எதுவும் சில காலம் தான் எனத் தெரிந்தும் பொறாமைப்படுகிறோம்?எப்படியோ ஒரு நாள் உடலை மண்ணுக்கு கொடுக்க இருக்கிறோம், ஏன்? இப்படியாக பல கேள்விகள் வாழ்க்கை சம்பந்தமாக எழுகின்றன?
வாழ்கை சம்பந்தமான கேள்விகளுக் விடையை பார்ப்போமானால் மனம் இதன் பிரதிபலிப்பே வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைக்கும் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே இருந்துள்ளதென்பதை அறியமுடிகிறது. இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் வெற்றியை நேக்கியே தங்களுடைய அன்றாடபொழுதைக்கழிக்கிறார்கள். ஆனால் பல சோதனைகளுக்கூடாக வெற்றியும் தோல்வியும் மாறி மாறி  வருவதை நன்றாக அவதானிக்கமுடிகிறது. இதில் மனத்தின் வேலை என்ன? வாழ்கையில் வரும் சோதனைகளை மனம் கையாளுகிற விதத்தைப்பொறுத்து  வ…

சிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்

சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில்  ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?)

சிரிப்பு என்பது இதழ்கலாள் மறைக்கபட்ட சொர்க்கம். சிரித்தால்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள் - சிரிப்பின் தத்துவமாகும்.
சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித்தொடர்புள்ளது இதன் காரணமாக சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும்கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி நேர் மறையான (Positive) எண்ணங்களை பரப்பும். சோக அலைகள் நம்மைச்சுற்றி எதிர் மறையான (Negative) எண்ணங்களை பரப்பும்.  ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்

அதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவுகோலாகவும் சிரிப்பு உள்ளது.

சிரிக்கும்போது விஞ்ஞான ‌அறிவியல் 
"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது.
இதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

வாழ்க்கையும் கணிதமும்

"கணிதம் என்பது எவ்வுலகத்துக்கும் பொதுவானதொரு மொழியாகும்"

நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நபர்களின் நடவடிக்கைகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஆயகலைகள் அறுபத்திநான்கில் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே அல்லது ஏதேனுமோரு கலையில் சிறிதளவாயினும் திறைமையாக இருப்பதை நன்கு அவதானிக்கலாம்.

ஆனால், பொதுவாக கணிதக்கலையானது  எல்லோருடைய அன்றாட வாழ்வில் இணைபிரியாதுள்ளது,

எப்படி சாத்தியமாகும்?

கணிதத்தின் அடிப்படைத் தத்துவமானது,
கூட்டல்கழித்தல்பெருக்கல்வகுத்தல்
இவ் நான்கு தத்தவத்தை விழிப்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக்கனியாகவே வைத்துக்கொள்ளாம்.

எப்படி என்று உதாரணம் மூலம் பார்ப்போம்?
கூட்டல்-நல்ல நபர்களை,நல்ல பழக்கவழக்கங்களைகழித்தல்-கெட்ட விடயங்களைபெருக்கல்-நியாய முறையில் பணத்தை ஈட்டுதல் (இதனால் மனமகிழ்ச்சிக்கு குறைவேயில்லை),வகுத்தல்-காலத்திற்கெற்றாற்போல் நேரத்தை திட்டமிடல். இவ் நான்கு கணித அடிப்படையின் விடைகளை சமன் மூலம் தெரியப்படுத்தலாம்(வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி தோல்விகளை சமன் செய்யவேண்டும்) இவ்கணித இலக்கணத்தை நல்ல வியூகத்துடன் வாழ பழகிக்கொண்டால் எந்நாளும் பொன்னான ந…