Sunday, May 26, 2013

மௌனம்

மௌனம் ஆறறிவுள்ள மனிதனால் மாத்திரம் கடைபிடிக்கப்படும் ஒரு செய்கையாகும் இதனால் மனக்கட்டுப்பாடு ஒர் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.அதே நேரத்தில் மௌனம்  கடைப்பிடிக்கப்படும் சந்தர்ப்பங்களைப்பொருத்து மௌனத்தின் பெறுமதியை நாம் விளங்கிக்கொள்ளலாம்.
கீழே சில உதாரணங்களைத் தருகிறேன்
  1. இன்பமான நேரங்களில் மௌனம் சம்மதம்
  2. நட்பில் மௌனம் நம்பிக்கை
  3. காதலில் மௌனம் சித்தரவதை
  4. வெற்றியில் மௌனம் அடக்கம்
  5. தேல்வியில் மௌனம் பெறுமை
  6. திட்டும்போது மௌனம் திட்டுபவரை பைத்தியமாக்குவது
  7. விருப்பமானவர் பிரியும் போது மௌனம் துக்கம்
  8. விருப்பமானவர் வெற்றிபெறும் போது மௌனம் மகிழ்ச்சி
  9. நாக்கின் கற்பு- மௌனம்
இப்படியாக மௌனத்தை விளக்கிக்கொண்டுபோகலாம் எனவே மௌனத்தின் வலிமையை எப்படிப்பட்டது என்று அறியலாம்

மௌனம் மிகச் சிறந்த பதில்தான்,
மென்மையான மொழிதான்,
பலராலும் திமிராகவே
கணிக்கப்படுகிறது !!!!!!   
Thanks newyarl.com


"மௌனத்தின் பெறுமதியை அறிந்தவர்களில் பெரும்பாலும் சித்தர்களே ஆவர் ,ஆனால் மௌனமாக வெகுநேரம் பயிற்சியின்றி சாதாரண எம்மால் இருக்கமுடியாது அதேநேரத்தில் வாயைமூடிக்கொண்டு கதைக்காமல் இருப்பது உண்மையான மௌனம் இல்லை.அதாவது அக,புற மனதினில் அமைதியுடன் அமைதியான முறையில் கடைபிடிக்கப்படும் மௌனமே மிகச்சிறந்ததாகும்"


  • ஒரு மனிதனைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதம்,அவனுக்கு பிடித்தவரின் மௌனம்தான்..... 

  • மௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கம் அளிக்கும்.கொடுமைக்கு உள்ளாகிறவனுக்கு ஊக்கமளிக்காது

  • அதே நேரத்தில் உன் மௌனத்தை சரியாக எவரால் மொழிபெயர்க்க முடியுமோ,அவருக்கு மட்டும் உன் மனதை படிக்கும் சக்தியுண்டு.

மௌனம்
மௌனம்


Separation

1 comment:

  1. மௌத்தின் இயல்புகளை வகைப்படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete

adw