Skip to main content

சுப்பிரமணிய பாரதி-தத்துவ சிந்தனைகள்

இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார்.இவர் வாழ்ந்தகாலம் 11 திசம்பர்1882 தொடக்கம் 11 செப்டம்பர் 1921வரையாகும்.அக்காலத்தில் தமிழகத்தில் பெண்ணுரிமை பற்றி பேசிய முதல் ஆள் இவராகத்தான் இருக்கமுடியும் என பல நூல்களில் எழுதப்பட்டுள்ளது,அது மட்டுமல்லாமல் இவரின் இருபத்தி மூன்று படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அதே நேரத்தில் சுப்பிரமணிய பாரதி இந்திய விடுதலைக்கா மிக வலிமையாக போரிட்டவர் ,போராட்ட காலத்தில் பல விடுதலை போராட்ட கவிதைகளையும்,பாட்டுக்களையும் இயற்றியவர். இவர் தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர்.இதன் காரணமாக இன்றும் இவரது படைப்புகளுக்கு தனிமரியாதையும் உண்டு.
சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கையானது நினைத்துப்பார்க்க முடியாதளவு மிக மிக வறுமையானது. எப்படி இருந்தும் தமிழ் தாய்க்கு வார்த்தையால் சொல்லமுடியாதளவுக்கு தனது வாழ் நாளையே அர்பனித்து சேவைசெய்தவர்.

சுப்பிரமணிய பாரதியின் சிந்தனைகள் ...

  • மற்றவர்களின் உள்ளத்தில் உங்களைப் பற்றிய பொய்யான மதிப்பை உண்டாக்க முயற்சிக்காதீர்கள்.இதனால் பல இடங்களில் அவமானப்படலாம்.
  •  கேட்டவுடன் உலகில் எதுவும் கிடைப்பதில்லை. பக்திக்கும் இது பொருந்தும். பக்குவமடைந்த பிறகே கேட்ட வரம் கிடைக்கும். இதற்கு பல காலம் பொறுக்கவேண்டும்
  • பக்தி அதிகரிக்க அதிகரிக்க மனோபலம் அதிகரிக்கும். அப்படிப்பட்டவன் இந்த பிறப்பிலேயே தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுவான். கலி உலகக் கோட்பாடு
  • வீட்டில் தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச்சிகரத்திற்குச் சென்று குகையில் அமர்ந்து தவம் செய்தாலும் கடவுள் தரிசனத்தைப் பெற முடியாது.
  • தனிமையை விரும்பியோ, மந்திரம் ஜெபித்தோ, யோகபயிற்சியில் ஈடுபட்டோ உலகத்தை விட்டு விலக முயற்சிக்க வேண்டாம். உலக விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டே மனதை ஒருநிலைப் படுத்துவதே பயனுடைய செயல்.
  • துன்பம் நேரும்போது துணிச்சல் என்னும் கடிவாளத்தால் கட்டி மனக்குதிரையைப் பிடித்து நிறுத்த வேண்டும். இதுவே சரியான யோகப்பயிற்சி.
   Subramanya Bharathi சுப்பிரமணிய பாரதி
   சுப்பிரமணிய பாரதி


Comments

Post a Comment

Popular posts from this blog

வாழ்க்கை தத்துவம்

வாழ்கை தத்துவம் தற்போதுள்ள மனித அறிவின் படி ஒரே ஒரு தடவைதான் எமது வாழ்கையாகும்.இவ்வாழ்க்கையானது ஒரு குறுகிய காலப்பகுதியை வரையறையாக கொண்டுள்ளது.(ஒவ்வொரு மனிதனுக்குமான இக்கால அவகாசம் சமமாக இருப்பதில்லை) இக்கால இடைவெளிக்குள் , வாழ்க்கை என்றால் என்ன? ஏன் வாழவேண்டும்?ஏன் உறவுகளை மதிக்க வேண்டும்.?ஏன் உண்மையாக இருக்கவேண்டும்?யாரை முழுமையாக நம்புவது?ஏன் கோபம் வருகிறது? ஏன் சிந்திக்கின்றோம்?எதுவும் சில காலம் தான் எனத் தெரிந்தும் பொறாமைப்படுகிறோம்?எப்படியோ ஒரு நாள் உடலை மண்ணுக்கு கொடுக்க இருக்கிறோம், ஏன்? இப்படியாக பல கேள்விகள் வாழ்க்கை சம்பந்தமாக எழுகின்றன?
வாழ்கை சம்பந்தமான கேள்விகளுக் விடையை பார்ப்போமானால் மனம் இதன் பிரதிபலிப்பே வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைக்கும் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே இருந்துள்ளதென்பதை அறியமுடிகிறது. இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் வெற்றியை நேக்கியே தங்களுடைய அன்றாடபொழுதைக்கழிக்கிறார்கள். ஆனால் பல சோதனைகளுக்கூடாக வெற்றியும் தோல்வியும் மாறி மாறி  வருவதை நன்றாக அவதானிக்கமுடிகிறது. இதில் மனத்தின் வேலை என்ன? வாழ்கையில் வரும் சோதனைகளை மனம் கையாளுகிற விதத்தைப்பொறுத்து  வ…

சிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்

சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில்  ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?)

சிரிப்பு என்பது இதழ்கலாள் மறைக்கபட்ட சொர்க்கம். சிரித்தால்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள் - சிரிப்பின் தத்துவமாகும்.
சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித்தொடர்புள்ளது இதன் காரணமாக சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும்கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி நேர் மறையான (Positive) எண்ணங்களை பரப்பும். சோக அலைகள் நம்மைச்சுற்றி எதிர் மறையான (Negative) எண்ணங்களை பரப்பும்.  ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்

அதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவுகோலாகவும் சிரிப்பு உள்ளது.

சிரிக்கும்போது விஞ்ஞான ‌அறிவியல் 
"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது.
இதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

வாழ்க்கையும் கணிதமும்

"கணிதம் என்பது எவ்வுலகத்துக்கும் பொதுவானதொரு மொழியாகும்"

நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நபர்களின் நடவடிக்கைகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஆயகலைகள் அறுபத்திநான்கில் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே அல்லது ஏதேனுமோரு கலையில் சிறிதளவாயினும் திறைமையாக இருப்பதை நன்கு அவதானிக்கலாம்.

ஆனால், பொதுவாக கணிதக்கலையானது  எல்லோருடைய அன்றாட வாழ்வில் இணைபிரியாதுள்ளது,

எப்படி சாத்தியமாகும்?

கணிதத்தின் அடிப்படைத் தத்துவமானது,
கூட்டல்கழித்தல்பெருக்கல்வகுத்தல்
இவ் நான்கு தத்தவத்தை விழிப்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக்கனியாகவே வைத்துக்கொள்ளாம்.

எப்படி என்று உதாரணம் மூலம் பார்ப்போம்?
கூட்டல்-நல்ல நபர்களை,நல்ல பழக்கவழக்கங்களைகழித்தல்-கெட்ட விடயங்களைபெருக்கல்-நியாய முறையில் பணத்தை ஈட்டுதல் (இதனால் மனமகிழ்ச்சிக்கு குறைவேயில்லை),வகுத்தல்-காலத்திற்கெற்றாற்போல் நேரத்தை திட்டமிடல். இவ் நான்கு கணித அடிப்படையின் விடைகளை சமன் மூலம் தெரியப்படுத்தலாம்(வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி தோல்விகளை சமன் செய்யவேண்டும்) இவ்கணித இலக்கணத்தை நல்ல வியூகத்துடன் வாழ பழகிக்கொண்டால் எந்நாளும் பொன்னான ந…