உப்பளத்திலிருந்து கறி உப்பு சேகரித்தல் |
உதாரணமாக இசையை எடுத்துக்கொண்டால் இதற்கு நாட்டியம், இலக்கணம் (வசனம்),போன்ற கலைகளின் தொடர்பு இருந்தால் தான் இசை வெற்றி பெறும் .
அதைப்போல் சமையல் கலைக்கு என்னதான் மற்றைய கலைகளின் உதவி இருந்தாலும் உப்பு எனும் அளவுக்கலை இல்லாவிடில் சமையல் கலையே இல்லை எனலாம்.
சமையல் கலைக்கு மட்டுமன்றி சிறுவர்களிடையே உப்பு மூடை தூக்கும் விளையாட்டானது அறிவுத்தன்மை , உடல் வலிமை, சிநேகிதத் தன்மை என்பவற்றை மிகவும் அதிகரிக்கும் விளையாட்டுத் துறைக்கு மறைமுகமாக உதவுது.
பொதுவாக உப்பு என்றாலே சாப்பாட்டின் ஞாபகம் தான் வரும்.
( உப்பின் குறையை மாங்காய் சாப்பிடும்போது உணர்ந்ததுண்டா? )(வாயில் எச்சு ஊறுகிற மாதிரி தெரியுது ???.)
எப்படியாயினும் அறு சுவைகளில் உப்பு எல்லோராலும் விரும்பப்படும் அடிப்படைச் சுவையாகும்,
உப்பை சுவைகளின் அரசன் என்று கூட அழைக்கலாம்.
உப்பு என்பது ஒரு பொதுவான பெயராகும் எப்படியெனில்,
- சமையல் உப்பு அல்லது கறியுப்பு,மேசை உப்பு.
- வேதியல் உப்பு -நச்சுத்தன்மை வாய்ந்தவை
- பசளை உப்பு அல்லது உரம்
- மருத்துவத்தில் பாவிக்கப்படும் உப்பு
நாம் சமையலுக்கு பயன்படும் உப்பைப்பற்றியே ( கறியுப்பு ) இந்த உப்பு தத்துவம் அமைந்துள்ளது
தூய உப்பானது சோடியம் குளோரைடு என்னும் வேதியல் பொருள்களின் கூட்டால் அமைந்த ஒரு கனிமமாகும் இதன் நிறம் தூய வெள்ளையாகும் .
உப்பு தயாரிக்கும் முறைகள்
- பொரு வாரியாக கடல்களுக்கு அண்டிய பகுதிகளில் கடல் நீரை உப்பளங்களில் தேக்கி அந்நீரை சூரிய வெப்பத்தால் ஆவியாக்கி எஞ்சும் படிமங்களை சேகரித்து ,தூய்மையாக்கி உப்பு உற்பத்தி செய்கிறார்கள்.
- மலைகள் சார்ந்த பகுதிகளில் சுரங்கம் அமைத்து தூய உப்பபை தோண்டி எடுக்கிறார்கள்
- மத்திய கிழக்கு நாடுகளில் வற்றும் ஏரிகளிருந்து உப்பை பெறுகிறார்கள் (சாக்கடல் ஏரி பிரபல்யமானது)
- சில இடங்களில் கிணற்றின் நீரானது உப்புத்தன்மையாக இருப்பதால் அதிலிருந்தும் உப்பு தயாரிக்கப்படுகிறது
- சில இடங்களில் கடல் நீரை செயற்கைமுறையில் ஆவியாக்கி உடன் உப்பை தாயர் செய்கிறார்கள்.
கறி உப்பின் பயன்கள்
- வணிகப்பொருள்
- உணவுக்கு சுவை,உணவை ஜீரணமாக்க
- உப்புக் கரைசல் ஓர் மின் கடத்தியாகும்
- சிறு உப்புக் கல் வாந்தி ,இருமலை தடைசெய்யும்
- உணவுப்பொருட்களை நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்திருத்தல்.
- கருவாடு
- ஊறுகாய்
- வாஸ்து நிவர்த்திக்கு (சிறு உப்பு பொட்டலங்களை பார்வைக்கு ஏற்றால் போல் வைத்தல்)
- பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட
- உப்புத் தண்ணீர் குளியல்
- சருமநோய்களுக்கு தீர்வு
- தசைபிடிப்புக்கு
- தொற்று நீக்கி
- சருமத்தை மென்மையாக்க, இறந்த சருமத்தை நீக்க
- தென்னை மரத்திற்கு மாத்திரம் பசளையாகும் (மற்றைய தாவரங்களுக்கு உப்பு நஞ்சாகும்)
- பனிக்கட்டிகளுடன் கலந்தால் பனி இலகுவில் உருகாது
- (ஜஸ் கட்டி) இதன் காரணமாக சில மருத்துவ பொருட்களை ஒரு இடத்திலிருந்து இந்நொரு இடத்திற்கு குளிர்சாதனம் இன்றி பனிப்பபெட்டிக்குள் வைத்தது மாற்றலாம்
- வாய் கொப்பளித்தல்
- பல்வலி
- தொண்டைவலி
- பற்களின் தூய்மைக்கு
- இரத்த அழுத்த நோய்க்கு
- மின் அழுத்தியின் அடியில் கறுப்பு நிறமாகவுள்ள மெழுகுத்தன்மையை அகற்ற
- உடைத்த தேங்காய் பாதியை உப்பு நீரினால் கழுவி இரு நாட்களுக்கு பூஞ்ஞனம் பிடிக்காமல் பாதுகாக்கலாம்.
உப்பு பொன்மொழிகள்
- உப்பிட்டவரை உள்ளவும் நினை.
- உப்பில்லா பண்டம் குப்பையிலே.
- நீரில் கரைந்த உப்பை பிரிக்க முடியாது.
- உப்புக்கு பகை நீர்
உப்பும் மத நம்பிக்கைகளும்
- இந்துமதம்
- கறி உப்பு ஒரு மங்களப் பொருள் என்பதால் திருமணம் , புது மனை புகுதல் போன்ற வைபவங்களுக்கு பாவித்தல்
- குழந்தைகளுக்கு கண்ணூறு கழித்தலுக்கு பாவித்தல்
- கறி உப்பு ஒரு மங்களப் பொருள் என்பதால் திருமணம் , புது மனை புகுதல் போன்ற வைபவங்களுக்கு பாவித்தல்
- குழந்தைகளுக்கு கண்ணூறு கழித்தலுக்கு பாவித்தல்
- பௌத்தம்
- சுடுகாட்டில் ஈமச்சடங்குகள் நடத்திவிட்டு சொந்த வீட்டுக்கு வருபவர்களை அல்லது நடுச்சாமத்தில் வீட்டுக்கு வருபவர்களை கறியுப்பினால் உடம்பைத் தடவி இடது பக்கத்தின் வழியாக எறிந்த பிற்பாடுதான் வீட்டுக்குள் நுழையலாம்- நோக்கம் துஷ்ட ஆவிகளை விரட்ட.
- கிரேக்க மதம்
- புதிதாக உதிக்கும் சந்திரனை வரவேற்க கறியுப்பை நெருப்பில் இட்டு அஞ்சலி செலுத்துவார்கள்
- சமனம்
- இறந்தவர்களின் உடலை எரிக்கும்போது உப்பை உபயோகிப்பர்
- சுடுகாட்டில் ஈமச்சடங்குகள் நடத்திவிட்டு சொந்த வீட்டுக்கு வருபவர்களை அல்லது நடுச்சாமத்தில் வீட்டுக்கு வருபவர்களை கறியுப்பினால் உடம்பைத் தடவி இடது பக்கத்தின் வழியாக எறிந்த பிற்பாடுதான் வீட்டுக்குள் நுழையலாம்- நோக்கம் துஷ்ட ஆவிகளை விரட்ட.
- புதிதாக உதிக்கும் சந்திரனை வரவேற்க கறியுப்பை நெருப்பில் இட்டு அஞ்சலி செலுத்துவார்கள்
- இறந்தவர்களின் உடலை எரிக்கும்போது உப்பை உபயோகிப்பர்
உப்பும் மூதாதையர்களின் நம்பிக்கையும்
(தெளிவான விளக்கம் கூற இயலாது )
- இரவில் கறி உப்பை இரவல் கொடுக்கக் கூடாதென்பர்.
- கறியுப்பை காலால் மிதிக்கக் கூடாது
- கறியுப்பை தரையில் சிந்தக்கூடாதென்பர்
- மாப்பிளையின் தாயார் மணமகளின் வீட்டுக் கறி உப்பு போடப்பட்டிருக்கும் பாத்திரத்தைப்பார்த்து முடிவு சொல்வால்.
- கறியுப்பு சிறட்டையின் வெளிப்புறத்தில் படியும் உப்பு படிமங்களை மங்களமாக நினைப்பார்கள்
கறி உப்பும் ஆரோக்கியமும்
உள்ளெடுக்கப்படும் உப்பின் அளவைப்பொறுத்து விளைவுகள் மாறுபடும்
- உடலின் நரம்புத்தொகுதி,தசைத் தொகுதி என்பவற்றை அளவான கறியுப்பு பலப்படுத்தும்
- இரத்த அழுத்தத்தை பராமரிக்கும்
- அளவான உப்பு இதயத்திற்கு பலமாகும்
- நீர்ச்சமநிலையை பேனுதல் (வயிற்றோட்டம்)
கறியுப்பை பற்றி பல சுவாரியமான கதைகள் ,அரசியல் போராட்டங்கள் ( மகாத்மா காந்தியின் போராட்டம் ),திரைப்படங்கள் என பல உள்ளன
அருமையான தொகுப்பு... பாராட்டுகள்...
ReplyDeleteThanks for your kind comments
Delete