Thursday, October 8, 2015

வாழ்க்கை தத்துவம் - Part-02

சிறு தத்துவ கதை மூலம் வாழ்க்கை தத்துவத்தை அறியலாம் எப்படி என்றால்?

சாதாரணமாக மக்களை நாத்திகவாதி மற்றும் பக்திவாதி என இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர் அவர்களிடம் வாழ்க்கையின் நோக்கம் என்ன ?
என்று கேட்டால்
இரு வாதிகளினதும் விடை பெரும்பாலும் முரணாக இருப்பதில்லை.
ஏன்?
ஓர் உதாரணக்கதை

நேர காலம் தவறாமல் கோவிலுக்குச் சென்று இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்த ஒருவர் தற்போது கோவிலுக்கு செல்வதில்லை.

 நாட்கள் செல்லச் செல்ல ஊர் மக்கள் மத்தியில் இவர் ஏன் கோவிலுக்கு வருவதில்லை என்ற கேள்விக்கு விடையறிய ஆவல்கொண்டர் ,
ஒரு நாள் அவ்வூர்மக்கள் அவரைசந்தித்து கேட்டும்விட்டனர்.

அவர் சிறிய புன்னகையுடன் ஊர்மக்களைப்பார்த்து கூறினார் நான் வாழ்க்கைய விளங்கிக்கொண்டேன்  ,இப்போது எனது மனம் தெளிவாக இருப்பதனால்  தான் கேவிலுகளுக்கெல்லாம் செல்வதில்லை என்றார்.

ஏதும் ஞானம் பெற்றுவிட்டீர்களோ என்று நகைத்தனர்? எப்படி என்றும்  கேட்டனர் ஊர்மக்கள்?

அதற்கு அவர் நாம் சிறு வயதிலிருந்து கோவிலுக்கும் ,பாடசாலைக்கும் செல்கிறோம் ஆனால் பாடசாலைப்படிப்பை விளங்கிக்கொண்டவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்

ஆனால் அதைவிட, அதைவிட மிக மேலான  தரத்தில் எதிர்காலத்தில் வாழவேண்டுமெனில்,

நாம் கட்டாயம் கோவில் படிப்புகளில் சித்தியடைய வேண்டும்.
கோவில் படிப்பில் சித்தியடையாத பட்சத்தில் இருப்பதால் தான் மீண்டும் மீண்டும் கோவிலுக்குச் செல்கிறோம் என்றார்.

( கோவில் படிப்பு என்றால் மதங்கள் கூறும் ஒழுக்கநெறி,முக்தியடையும் வழி என செல்லலாம் )

இக்கதையின் பிற்பாடு அவ்வூர் மக்களுக்கு வாழ்க்கையின் தத்துவத்தை விளங்கிக் கொண்டனர், நீங்களும் தானே??

No comments:

Post a Comment

adw