Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Monday, January 2, 2017

காத்திருக்கப் பழகு - தத்துவம்

சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: 

'தியானம் செய். நான் அழைக்கும் வரை காத்திரு'. 



காத்திரு


நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும் அவையாவன. 

  • பசிக்கும் வரை காத்திரு 
  • உடல் நீர் கேட்கும் வரை காத்திரு
  • காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு 
  • சளி வெளியேறும் வரை காத்திரு 
  • உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு 
  • பயிர் விளையும் வரை காத்திரு 
  • உலையில் அரிசி வேகும் வரை காத்திரு 
  • கனி கனியும் வரை காத்திரு
  • எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.
  • செடி மரமாகும் வரை காத்திரு 
  • செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு 
  • தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு 
  • தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு 
  • துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு 
  • தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு 
  • உணவு தயாராகும் வரை காத்திரு 
  • போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு
  • நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த  கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு
  • பிறர் கோபம் தணியும் வரை காத்திரு

இது உன்னுடைய வாழ்க்கை ஒட்டப்பந்தையம் அல்ல

  • ஒடாதே
  • நில்
  • விழி
  • பார்
  • ரசி
  • சுவை
  • உணர்
  • பேசு
  • பழகு
  • விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்,

  1. உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.
  2. உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.
  3. எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.  
  4. உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா?

நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்.


காத்திருக்கப் பழகினால்

  1. வாழப் பழகுவாய்.
  2. இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்.
  3. எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்.
வேறு ஏதேனும் தெரியுமாயின்   .........................

Sunday, July 12, 2015

உப்பு தத்துவம் -Salt in Tamil


கறி உப்பு
உப்பளத்திலிருந்து கறி உப்பு சேகரித்தல்
ஒவ்வொரு கலையும் இன்னுமொரு கலையுடன் இணைந்தால் தான் அதன் பெருமை உலகறியப்படும்
உதாரணமாக இசையை எடுத்துக்கொண்டால் இதற்கு நாட்டியம், இலக்கணம் (வசனம்),போன்ற கலைகளின் தொடர்பு இருந்தால் தான் இசை வெற்றி பெறும் .
அதைப்போல் சமையல் கலைக்கு என்னதான் மற்றைய கலைகளின் உதவி இருந்தாலும் உப்பு எனும் அளவுக்கலை இல்லாவிடில் சமையல் கலையே இல்லை எனலாம்.

சமையல் கலைக்கு மட்டுமன்றி  சிறுவர்களிடையே உப்பு மூடை தூக்கும் விளையாட்டானது  அறிவுத்தன்மை  , உடல் வலிமை, சிநேகிதத் தன்மை என்பவற்றை  மிகவும்  அதிகரிக்கும் விளையாட்டுத் துறைக்கு மறைமுகமாக உதவுது.

பொதுவாக  உப்பு  என்றாலே சாப்பாட்டின்  ஞாபகம் தான் வரும்.
( உப்பின் குறையை மாங்காய் சாப்பிடும்போது உணர்ந்ததுண்டா? )
(வாயில் எச்சு ஊறுகிற மாதிரி தெரியுது ???.)

எப்படியாயினும் அறு சுவைகளில் உப்பு எல்லோராலும் விரும்பப்படும் அடிப்படைச் சுவையாகும்,
உப்பை சுவைகளின் அரசன் என்று கூட அழைக்கலாம்.

உப்பு என்பது ஒரு பொதுவான பெயராகும் எப்படியெனில்,
  • சமையல் உப்பு அல்லது கறியுப்பு,மேசை உப்பு.
  • வேதியல் உப்பு -நச்சுத்தன்மை வாய்ந்தவை
  • பசளை உப்பு அல்லது உரம்
  • மருத்துவத்தில் பாவிக்கப்படும் உப்பு
நாம் சமையலுக்கு பயன்படும் உப்பைப்பற்றியே ( கறியுப்பு ) இந்த உப்பு தத்துவம் அமைந்துள்ளது

தூய உப்பானது சோடியம் குளோரைடு என்னும் வேதியல் பொருள்களின் கூட்டால் அமைந்த ஒரு கனிமமாகும் இதன் நிறம் தூய வெள்ளையாகும் .

உப்பு தயாரிக்கும் முறைகள்

  1. பொரு வாரியாக கடல்களுக்கு அண்டிய பகுதிகளில் கடல் நீரை உப்பளங்களில் தேக்கி அந்நீரை சூரிய வெப்பத்தால் ஆவியாக்கி எஞ்சும் படிமங்களை சேகரித்து ,தூய்மையாக்கி உப்பு உற்பத்தி செய்கிறார்கள்.
  2. மலைகள் சார்ந்த பகுதிகளில் சுரங்கம் அமைத்து தூய உப்பபை தோண்டி எடுக்கிறார்கள்
  3. மத்திய கிழக்கு நாடுகளில் வற்றும் ஏரிகளிருந்து உப்பை பெறுகிறார்கள் (சாக்கடல் ஏரி பிரபல்யமானது)
  4. சில இடங்களில் கிணற்றின் நீரானது உப்புத்தன்மையாக இருப்பதால் அதிலிருந்தும் உப்பு தயாரிக்கப்படுகிறது
  5. சில இடங்களில் கடல் நீரை செயற்கைமுறையில் ஆவியாக்கி உடன் உப்பை தாயர் செய்கிறார்கள்.

 கறி உப்பின் பயன்கள்

  • வணிகப்பொருள் 
  • உணவுக்கு சுவை,உணவை ஜீரணமாக்க
  • உப்புக் கரைசல் ஓர் மின் கடத்தியாகும்
  • சிறு உப்புக் கல் வாந்தி ,இருமலை தடைசெய்யும் 
  • உணவுப்பொருட்களை நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்திருத்தல்.
    • கருவாடு
    • ஊறுகாய்
  • வாஸ்து நிவர்த்திக்கு (சிறு உப்பு பொட்டலங்களை பார்வைக்கு ஏற்றால் போல் வைத்தல்)
  • பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட
  • உப்புத் தண்ணீர் குளியல்
    • சருமநோய்களுக்கு தீர்வு
    • தசைபிடிப்புக்கு
    • தொற்று நீக்கி
    • சருமத்தை மென்மையாக்க, இறந்த சருமத்தை நீக்க
  • தென்னை மரத்திற்கு மாத்திரம் பசளையாகும் (மற்றைய தாவரங்களுக்கு உப்பு நஞ்சாகும்)
  • பனிக்கட்டிகளுடன் கலந்தால் பனி இலகுவில் உருகாது 
    • (ஜஸ் கட்டி) இதன் காரணமாக சில மருத்துவ பொருட்களை ஒரு இடத்திலிருந்து இந்நொரு இடத்திற்கு குளிர்சாதனம் இன்றி பனிப்பபெட்டிக்குள் வைத்தது மாற்றலாம்
  • வாய் கொப்பளித்தல்
    • பல்வலி
    • தொண்டைவலி 
    • பற்களின் தூய்மைக்கு
  • இரத்த அழுத்த நோய்க்கு
  • மின் அழுத்தியின் அடியில் கறுப்பு நிறமாகவுள்ள மெழுகுத்தன்மையை அகற்ற 
  • உடைத்த தேங்காய் பாதியை உப்பு நீரினால் கழுவி இரு நாட்களுக்கு பூஞ்ஞனம் பிடிக்காமல் பாதுகாக்கலாம்.

உப்பு பொன்மொழிகள்

  1. உப்பிட்டவரை உள்ளவும் நினை.
  2. உப்பில்லா பண்டம் குப்பையிலே.
  3. நீரில் கரைந்த உப்பை பிரிக்க முடியாது.
  4. உப்புக்கு பகை நீர்

உப்பும் மத நம்பிக்கைகளும் 

  • இந்துமதம் 
    • கறி உப்பு ஒரு மங்களப் பொருள் என்பதால் திருமணம் , புது மனை புகுதல் போன்ற வைபவங்களுக்கு பாவித்தல்
    • குழந்தைகளுக்கு கண்ணூறு கழித்தலுக்கு பாவித்தல் 

  • பௌத்தம்
    • சுடுகாட்டில் ஈமச்சடங்குகள் நடத்திவிட்டு சொந்த வீட்டுக்கு வருபவர்களை அல்லது நடுச்சாமத்தில் வீட்டுக்கு வருபவர்களை கறியுப்பினால் உடம்பைத் தடவி இடது பக்கத்தின் வழியாக எறிந்த பிற்பாடுதான் வீட்டுக்குள் நுழையலாம்- நோக்கம் துஷ்ட ஆவிகளை விரட்ட.
  • கிரேக்க மதம்
    • புதிதாக உதிக்கும் சந்திரனை வரவேற்க கறியுப்பை நெருப்பில் இட்டு அஞ்சலி செலுத்துவார்கள்
  • சமனம்
    • இறந்தவர்களின் உடலை எரிக்கும்போது உப்பை உபயோகிப்பர்

உப்பும்  மூதாதையர்களின் நம்பிக்கையும் 

 (தெளிவான விளக்கம் கூற இயலாது  )
  • இரவில் கறி உப்பை இரவல் கொடுக்கக் கூடாதென்பர்.
  • கறியுப்பை காலால் மிதிக்கக் கூடாது
  • கறியுப்பை தரையில் சிந்தக்கூடாதென்பர்
  • மாப்பிளையின் தாயார் மணமகளின் வீட்டுக் கறி உப்பு போடப்பட்டிருக்கும் பாத்திரத்தைப்பார்த்து முடிவு சொல்வால்.
  • கறியுப்பு சிறட்டையின் வெளிப்புறத்தில் படியும் உப்பு படிமங்களை மங்களமாக நினைப்பார்கள்

கறி உப்பும் ஆரோக்கியமும்

உள்ளெடுக்கப்படும் உப்பின் அளவைப்பொறுத்து விளைவுகள் மாறுபடும் 
  • உடலின் நரம்புத்தொகுதி,தசைத் தொகுதி என்பவற்றை அளவான கறியுப்பு பலப்படுத்தும்
  • இரத்த அழுத்தத்தை பராமரிக்கும்
  • அளவான உப்பு இதயத்திற்கு பலமாகும்
  • நீர்ச்சமநிலையை பேனுதல் (வயிற்றோட்டம்)


கறியுப்பை பற்றி பல சுவாரியமான கதைகள் ,அரசியல் போராட்டங்கள்       ( மகாத்மா காந்தியின் போராட்டம் ),திரைப்படங்கள்  என பல உள்ளன

Wednesday, June 17, 2015

வழிபாடு - Worship in Tamil

வழிபாடு என்பதன் கருத்து ஏதோவொரு முக்கிய காரணத்தின் நிமிர்த்தம் நம்பிக்கையுடன் பணிந்து கேட்டல் எனலாம்.

இவ் வழிபாடானது மனிதனை காக்கும் கவசமாக விளங்குகிறது

வழிபாட்டினை பிராத்தனை, பூஜிப்பது என்றும் கூறலாம்.

இச் செயல்பாடனது ஆதி காலம் தொட்டே இருந்ததுக்கான சான்றுகள் உள்ளன எப்படி எனில்

ஆதி மனிதனின் வழிபாடானது இயற்கை சக்தியைச் சார்ந்திருந்தது (சூரியன்,சந்திரன்,மழை,காற்று,தீ ......)
ஏனெனில் சில வேளைகளில் அவற்றின் சீற்றங்களை குறைப்பதற்காகவும், அச்சத்தை அகற்றுவதற்கும், தன் வாழ்க்கைச் சூழலையும் அனுசரிக்கவும் தேவையான நேரத்தில் அதன் பிரயோசனத்தையும் அடையவதற்குமாக இருந்தது.

காலப்போகில், அறிவு ,நாகரீக வளர்ச்சியின் நிமிர்த்தம்

இயற்கை சக்தியை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய சக்தி ஒன்று சதாரண கண்ணுக்கு புலப்படாமல் இருக்குது என்பதை அறிந்த பின் அச்சக்திக்கு கடவுள் எனப் பெயரிட்டான். ( பெரும்பாலானவை விஞ்ஞான பூர்வமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது )

பிற்பாடு  இச் சக்கிக்கு  பல உருவம் கொடுத்தார்கள், குறியீடுகளை வழங்கிளார்கள் , வழிபடும் முறையை வகுத்தார்கள், மதங்களை வகுதத்தனர், மக்களை மூடர்களாக்கினார்கள்

வழிபாடு வளர்ச்சியடைந்த விதம்

  1. இயற்கை (சூரியன், சந்திரன்....) 
  2. ஆவி பேய் 
  3. விலங்குகள் (நாகம்,கருடன்,பசு....),
  4. மரம் (அரசு,வேம்பு,....)
  5. உருவங்கள் (லிங்கம், கணபதி,,யேசு ,புத்தர்,........)
  6. உருவமற்ற முறை (இஸ்லாம்,பென்திகோஸ்,சீக்கியம்......)
  7. தன்னை விடவும் சக்தி பொருந்திய மனிதர்களை வழிபடும் முறை 
    1. சித்தர்கள் 
    2. சத்ய சாய் பாபா
    3. பாப்பாண்டவர்
    4. இராமகிருஷ்னர்
    5. பௌத்த பிக்குகள்
    6. ஆலயங்களிள் பூஜிப்பவர்கள்
    7. உயிர் நீத்தவர்கள் 
 இதன் பிற்பாடுதன் இவ்வுலகில் பிரச்சனைகள் ,சண்டைகள் என்பன ஆரம்பமாயின  என வரலாற்றை ஆராய்கையில் அறியமுடிகிறது.


வழிபாட்டின் நோக்கம்

  1. வாழ்க்கையில் வளம் பெற
  2. நோய் நெடிகள் குணமாக
  3. மன அமைதிக்காக
  4. உயிர் விட்ட (இறந்த) உறவுகளின் ஆத்மா சாந்தியடைய
  5. மலட்டுத்தன்மை நீங்கி மக்கட்பேறு அடைய
  6. எண்ணம் சிந்தனைகளில் தெளிவு
  7. நினைத்தது கிடைக்க வேண்டும்.
  8. கெடுதல் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க அல்லது மன்னிப்பு

வழிபடும் முறைகள்

  • பொதுவாக பூக்களை வைத்தே வழிபடும் முறையானது பொதுவாக உள்ளது (இஸ்லாம் மதத்தின் வழிபாபட்டு முறையில் பூக்களுக்கு இடமில்லை)
  • ஊது பத்திகள்,சாம்பிராணி வேறு நறுமணப் பொருட்களினால்.
  • இரு கைகளை கூப்பியும், விரித்தும்
  • கண்களை மூடியும் திறந்த நிலையிலும் 
  • பத்மாசனம்,பாலாசனம் ,நின்று ,நாற்காலியில் இருந்தும் ,முட்டுக்காலில் இருந்தும்
  • உண்ணாவிரதம், நேன்பு
  • மௌன விரதம்
  • பாதயாத்திரை  

வழிபடும் வழிகள்

  • மந்திரம் உச்சரித்தல் (மொழி- பாலி சமஸ்கிரதம்,அராபி)
  • ஓதுதல்
  • இசைக்கருவிகளை இசைத்து பாட்டுப்பாடி
  • தியானம்
  • தெய்வம் ஆடுதல்
  • மிருக பலி 
  • பொங்கல், படையல்
  • தாய் மொழியில் வேண்டுதல்  
உளவியல் கருத்துப்படி வழிபாடு என்பது மன நிம்மதி தருகின்ற ஒரு தீர்வு

 ஏனெனில் மனித வாழ்க்கையில் அடுத்தவர் மீது நம்பிக்கை குறைதல், அடுத்தவரை ஜெயிக்க முடியாமை பேன்ற நேரத்தில்தான் கடவுளையும் வழிபாட்டினையும் செய்கிறேம்.
 இது ஏமாற்றத்தையும் இயலாமையுமே காட்டுகிறது ஆகவே 

மனிதர்களுக்கிடையிலான நம்பிக்கையை  பலப்படுத்தினால் வழிபாடு எங்கோ போய்விடும்,ஆனால் அதை செய்ய உலகம் விரும்புமா ?
வழிபாடு
வழிபாடு

Thursday, June 11, 2015

வெற்றிலை தத்துவம் -Piper Betel in Tamil

வெற்றிலை என்பது மிளகுக்குடும்பத்தைச் சேர்ந்த ஒர் மூலிகைக் கொடியாகும் பணப்பயிரும் ,வெற்றிக்கு வழிவகுக்கும் இலையும் கூட.

வெற்றிலையில் உள்ள சத்துக்கள்

  • நீர் சத்து 
  • புரசசத்து 
  • கொழுப்புச்சத்து
  • கால்சியம்
  • கரோட்டின்
  • தயமின்
  • ரிபோபிளேவின் 
  • வைட்டமின் சி உள்ளது
மிக முக்கியமாக வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் சக்தி கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் வேதியல் பொருள் உண்டு.

வெற்றிலையின் மறு பெயர்கள் 

  • நாகவள்ளி 
  • தாம்பூலம்
  • மெல்லிலை

வெற்றிலையின் வகைகள்

  • இலங்காய் வெள்ளக்கொடி வெற்றிலை.
  • முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை
  • இளங்கால் கற்பூரி வெற்றிலை
  • முதகால் கற்பூரி வெற்றிலை.
  • நீர் வெற்றிலை
  • மலை (மல)  வெற்றிலை

வெற்றிலையின் பயன்கள் 

  1. மருத்துவம்
    1. வெற்றிலை சாறு ஓர் சிறந்த கிருமிகொல்லி (Antiseptic)
    2. சுவாசத்திற்று புத்துணர்ச்சி ஊட்டல்
    3. அஜீரணக் கோளாற்றிற்கு சிறந்த மருந்து
    4. நெஞ்சுச்சளிக்கு கைமருந்து
    5.  மிளகுடன் வெற்றிலையை மென்று உண்டால் உடலில் உள்ள நச்சுத்தன்மை அகற்றப்படும்
  2. இறைவழிபாடுக்கு  (ஆஞ்நேயருக்கு பிடித்த வெற்றிலை மாலை))
  3. விழாக்களுக்கு பெரியவர்களை வரவேற்க 
  4. சோதிடம் பார்க்க (சோதிடருக்கு கொடுக்கும் வெற்றிலைகளின் எண்ணிக்கையை பொறுத்தது சாத்திரம் கூறல் ) இதனை வெற்றிலை வைத்து கேட்டல் என்பார்கள்
  5. பணப்பரிமாற்றம் (இரு வெற்றிலைக்கிடையில் பணத்தை வைத்து கொடுத்தல்)
  6. சிலர் தங்களுடைய மதிலில் கொடியை படரவிட்டு அழகுபார்க்கிறார்கள்.
  7. சிறு போதையை உண்டுபண்ண (பாக்கு,புகையிலை,களிச்சுண்ணாம்புடன் சப்புதல்)
    1. உமிழ் நீர் சுரப்பியின் ஊடாக இரத்த ஓட்டத்தில் கலந்து மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்தல்
  8. மலமிளக்கி - மலம் கழிக்க கஷ்டப்படும் குழந்தையின் மல வாயினுள் நல்லெண்ணை தேய்த்த வெற்றிலை காம்பை செலுத்தி ,சிறு அசைவு கொடுக்கும் போது சிறுது நேரத்தின் பின் மலம் கழியும்.

வெற்றிலையுடன் மென்னும் பொருட்கள்

  • வெற்றிலையுடன் பாக்கு (பச்சை,காய்ந்த)
  • வெற்றிலையுடன் பாக்கு (பச்சை,காய்ந்த),சுண்ணாம்பு 
    • வாய் நன்றாக சிவந்து பற்களில் கறை படிதல்.
  • வெற்றிலையுடன் பாக்கு ,புகையிலை 
  • வெற்றிலையுடன் பாக்கு ,சுண்ணாம்பு,புகையிலை
  • வெற்றிலையுடன் மிளகு 
  • வெற்றிலையுடன் இலவங்கபட்டை

வெற்றிலை அளவீடு

ஒரு டசின்  என்பது பன்னிரண்டு (12)பொருட்களின் சேர்க்கையாகும் ஆனால் ஒரு கவுளி(இந்தியா) , பகிளி (இலங்கை)(பகளி ,பகழி,பகிழி) என்பது நாற்பது  வெற்றிலைகளைக் கொண்டதாகும். சிலர் ஐம்பது வெற்றிலைகள் எனவும் கணக்கிட்டுக்கொள்வர்.

adw