Saturday, May 23, 2015

தொழு நோய் (Leprosy in Tamil)

தொழு நோய்
தொழு நோய்
       ஆதி காலம்தொட்டே இப்பூமியில் இருந்து கொண்டிருக்கும் வெப்பமன்ற வலயப்பகுதியில் வாழ்பவர்களை தாக்கும் உயிர்க்கொல்லி  தொற்று நோய்களில் தொழு நோயானது அமைதியாகக் கொல்லும் பயங்கரமான நோயாகும்.

உலகில் அதிகளவில் உள்ள உயிரினம் பாக்டீரியா ஆகும் அவற்றில் இருவகையான பாக்டீரியா (பற்றீரியா )க்களே தொழுநோய்கான முக்கிய காரணிகளாகும் என்பதை 1873 ம் ஆண்டு நோர்வே  நாட்டு மருத்துவ விஞ்ஞானி  கெரார்டு ஆன்சன் என்பவரால் கண்டறியப்படட்து அதன்பொருட்டு தொழுநோய்க்கு ஆன்சன் நோய் (ஃகான்சனின் நோய் ) (Hansen's Disease (HD) ) என்ற மறுபெயரும் உண்டு.

மருத்துவ விஞ்ஞானின் முழுப் பெயர்:-

கெரார்டு ஆர்மவுர் ஹான்சன்  (Gerhard Armaer Hansen)

தொழு நோய்- பாக்டீரியாக்களின் பெயர்கள்

 1. மைக்கோபாக்டீரியம் இலெப்ரே  (Mycobacterium Leprae ) 1873 ல் கண்டுபிடிக்கபட்டது
 2. மைக்கோபாக்டீரியம் இலெப்புரோமட்டோசிசு(Mycobacterium Lepromatosis) 2008 ல் தான் கண்டுபிடிக்கபட்டது

தொழு நோய் பரவும் விதம்

 • தொழு நோயாளி ஒருவர் இருமும்போது  கிருமி காற்றில் பரவுவதாலும் அல்லது அவரது மூக்கில் இருந்து வெளிவரும் திரவம் படுவதாலும் (தும்மல்) இந்நோய் பரவுவதாக நம்பப்படுகிறது. 
 • தொடுகை மூலம் பரவுதல் (தொழுநோயாளி தொடுகையில்)
 • ஆர்மட்டிலே (Armadillo) என்னும் உயிரனத்தினூகவும் இவ் பக்டீரீயாக்கள் பரவுகின்றன

இந் நோய்க்கிருமிகள் தொற்று உள்ளவருக்கு உடனடியாக தொழுநோயை ஏற்படுத்ததாது ஏனெனில் 
 1. உடம்பின் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் வலிமை.
 2. இவ் வகை பாக்டீரியாக்களின் வளர்ச்சியானது (பெருக்கம்) மிக மிக  மெதுவாக நடைபெறுதல் (Slow growing)
 3. அவ் பக்டீரீயாக்கள் கிட்டத்தட்ட 03-05 ஆண்டுகளுக்கிடையில் அடைகாத்து தனது இனத்தை மெதுவாக பெருக்கிக்கொண்டு மீண்டும் பீதியை கிழப்பக் கூடிய பாக்டீரீயாக்கள்  
இதன் காரணமாகவும் அறிவற்ற தன்மையாலும் தெற்றுக்கு உள்ளாகுபவர் துரதிருஷ்டமாக திரும்பத் திரும்ப இவ்விரு பரவும் வழிகளுக்கு முகம்கொடுத்து விருந்தளிப்பதால் இவ் பாக்டீரீயாக்கள்  இலகுவாக பரவும்.
(பரவும் முறையானது மருத்துவ துறைக்கு ஒரு சவாலாக உள்ளது)

எப்படி இருப்பினும் பாக்டீரீயாக்களை அழிக்கவல்ல சிறந்த மாத்திரைகள்  உள்ளபடியால் இதனை எப்படியும் குணப்படுத்தலாம்.


உலக தொழு நோய் ஒழிப்பு தினமாக ஒவ்வெரு வருடமும் ஐனவரி 30 ந் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது

தொழு நோயினால் பாதிப்படையும் உறுப்புக்கள்

 • முதலில் பாதிக்கப்படும் உறுப்பு தோல் ஆகும் அதன் பிற்பாடு இது நரம்பு மண்டலத்தையும் பார்வை,சுவை ,கேட்டல் ,உணர்வு போன்ற ஐம்புலங்களை தாக்கும்
 • மூளை,முள்ளம் தண்டு.
 • சிறுநீரகங்கள் (Kidney)
 • ஆண் பாலியல் உறுப்பு

தொழுநோய் அறிகுறிகள்

 • தோல்களில் நிறமற்ற நீர் கொப்பளங்கள் தோன்றுதல்,அவைக்கு மருத்துவம் செய்தும் எவ்வித பலனும்மின்றி நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்தல்
 • கை,கால் மரத்துப் போதல்
 • தசைகளில் பிடிப்பு  அல்லது தொய்வுத்தன்மை

தொழு நோயை கண்டுபிடிக்கும் முறைகள்

சந்தேகத்துக்குரிய அல்லது பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட உடல் திசு ஆய்வு (Biopsy)  ஒன்றேயாகும்

தொழு நோய்க்கு மருத்துவம்

 • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி தொழு நோயானது குணப்படுத்தக் கூடியதாகவுள்ளது.இவ் அமைப்பானது அனைத்து தொழு நோயாளர்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகளை வழங்குகிறது.
 • தொழு நோய்க்குரிய மருந்தை தொடர்ந்து ஆறு மாதம் வரைக்கும் எடுக்க வேண்டும் சில நேரத்தில் வருடக்கணக்காவும் இருக்கலாம்

தொழு நோயாளர்களின் முறையீடுகள்

 1. மங்களான பார்வை
 2. கை,கால்,முகம் வீக்கம்
 3. மலட்டுத்தன்மை 
 4. ஆண்குறி கலவிக்கு முகம்கொடுக்காமை
 5. சிறு நீரகங்களில் வேதனை
 6. கை.,கால்  நீட்டி மடிக்க முடியாமை
 7. மூக்கிலிருந்து இரத்தம் மற்றும் சளி என்பன தொடர்ந்து வந்துகொண்டிருத்தல்
 8. தொழு நோய்க்கிருமியானது நரம்பு மண்டலத்தை  நன்றாக ஆக்கிரமித்திருந்தால் நோயாளியின் சில அவயவங்கள் செயலிழந்தும் அவை உருமாறுவதையும் அவதானிக்கலாம்

No comments:

Post a Comment

adw