வெற்றிலை என்பது மிளகுக்குடும்பத்தைச் சேர்ந்த ஒர் மூலிகைக் கொடியாகும் பணப்பயிரும் ,வெற்றிக்கு வழிவகுக்கும் இலையும் கூட.
வெற்றிலையில் உள்ள சத்துக்கள்
- நீர் சத்து
- புரசசத்து
- கொழுப்புச்சத்து
- கால்சியம்
- கரோட்டின்
- தயமின்
- ரிபோபிளேவின்
- வைட்டமின் சி உள்ளது
மிக முக்கியமாக வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் சக்தி கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் வேதியல் பொருள் உண்டு.
வெற்றிலையின் மறு பெயர்கள்
- நாகவள்ளி
- தாம்பூலம்
- மெல்லிலை
வெற்றிலையின் வகைகள்
- இலங்காய் வெள்ளக்கொடி வெற்றிலை.
- முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை
- இளங்கால் கற்பூரி வெற்றிலை
- முதகால் கற்பூரி வெற்றிலை.
- நீர் வெற்றிலை
- மலை (மல) வெற்றிலை
வெற்றிலையின் பயன்கள்
- மருத்துவம்
- வெற்றிலை சாறு ஓர் சிறந்த கிருமிகொல்லி (Antiseptic)
- சுவாசத்திற்று புத்துணர்ச்சி ஊட்டல்
- அஜீரணக் கோளாற்றிற்கு சிறந்த மருந்து
- நெஞ்சுச்சளிக்கு கைமருந்து
- மிளகுடன் வெற்றிலையை மென்று உண்டால் உடலில் உள்ள நச்சுத்தன்மை அகற்றப்படும்
- இறைவழிபாடுக்கு (ஆஞ்நேயருக்கு பிடித்த வெற்றிலை மாலை))
- விழாக்களுக்கு பெரியவர்களை வரவேற்க
- சோதிடம் பார்க்க (சோதிடருக்கு கொடுக்கும் வெற்றிலைகளின் எண்ணிக்கையை பொறுத்தது சாத்திரம் கூறல் ) இதனை வெற்றிலை வைத்து கேட்டல் என்பார்கள்
- பணப்பரிமாற்றம் (இரு வெற்றிலைக்கிடையில் பணத்தை வைத்து கொடுத்தல்)
- சிலர் தங்களுடைய மதிலில் கொடியை படரவிட்டு அழகுபார்க்கிறார்கள்.
- சிறு போதையை உண்டுபண்ண (பாக்கு,புகையிலை,களிச்சுண்ணாம்புடன் சப்புதல்)
- உமிழ் நீர் சுரப்பியின் ஊடாக இரத்த ஓட்டத்தில் கலந்து மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்தல்
- மலமிளக்கி - மலம் கழிக்க கஷ்டப்படும் குழந்தையின் மல வாயினுள் நல்லெண்ணை தேய்த்த வெற்றிலை காம்பை செலுத்தி ,சிறு அசைவு கொடுக்கும் போது சிறுது நேரத்தின் பின் மலம் கழியும்.
வெற்றிலையுடன் மென்னும் பொருட்கள்
- வெற்றிலையுடன் பாக்கு (பச்சை,காய்ந்த)
- வெற்றிலையுடன் பாக்கு (பச்சை,காய்ந்த),சுண்ணாம்பு
- வாய் நன்றாக சிவந்து பற்களில் கறை படிதல்.
- வெற்றிலையுடன் பாக்கு ,புகையிலை
- புற்று நோய்க்கு வழிவகுத்தல்
- வெற்றிலையுடன் பாக்கு ,சுண்ணாம்பு,புகையிலை
- வெற்றிலையுடன் மிளகு
- வெற்றிலையுடன் இலவங்கபட்டை
வெற்றிலை அளவீடு
ஒரு டசின் என்பது பன்னிரண்டு (12)பொருட்களின் சேர்க்கையாகும் ஆனால் ஒரு கவுளி(இந்தியா) , பகிளி (இலங்கை)(பகளி ,பகழி,பகிழி) என்பது நாற்பது வெற்றிலைகளைக் கொண்டதாகும். சிலர் ஐம்பது வெற்றிலைகள் எனவும் கணக்கிட்டுக்கொள்வர்.
முழுமையான தகவலுக்கு நன்றி...
ReplyDeleteThanks your kind comments
Delete