சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்:
'தியானம் செய். நான் அழைக்கும் வரை காத்திரு'.
நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும் அவையாவன.
- பசிக்கும் வரை காத்திரு
- உடல் நீர் கேட்கும் வரை காத்திரு
- காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு
- சளி வெளியேறும் வரை காத்திரு
- உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு
- பயிர் விளையும் வரை காத்திரு
- உலையில் அரிசி வேகும் வரை காத்திரு
- கனி கனியும் வரை காத்திரு
- எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.
- செடி மரமாகும் வரை காத்திரு
- செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு
- தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு
- தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு
- துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு
- தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு
- உணவு தயாராகும் வரை காத்திரு
- போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு
- நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு
- பிறர் கோபம் தணியும் வரை காத்திரு
இது உன்னுடைய வாழ்க்கை ஒட்டப்பந்தையம் அல்ல
- ஒடாதே
- நில்
- விழி
- பார்
- ரசி
- சுவை
- உணர்
- பேசு
- பழகு
- விரும்பு
உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்,
- உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.
- உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.
- எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.
- உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா?
நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்.
காத்திருக்கப் பழகினால்
- வாழப் பழகுவாய்.
- இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்.
- எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்.
வேறு ஏதேனும் தெரியுமாயின் .........................
No comments:
Post a Comment