வெற்றி தரும் எண்ணங்களைபற்றி அறிஞர்களின் கருத்து
- "வெற்றியினைச் சிந்தியுங்கள் வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள்.வெற்றியை உருவாக்கத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும். மனப்படம் அல்லது மனப்பான்மை மிக வலிமையுடன் நிலைபெறுகிறபோது அது சூழ்நிலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. இதற்கும் மனக்கட்டுப்பாடுதான் அவசியமாகிறது" - வின்சென்ட் பீல்(மதப்போதகரும் மனோதத்துவ நிபுணரும்)
- "நம்பிகைதான் நிகழ்ச்களை உருவாக்குகிறது " - வில்லியம் ஜேம்ஸ்
- "எண்ணம் எவ்வளவு வன்மையுடன் உடலை ஆட்சி செய்கின்றது என்பதை எண்ணிப்பர்கும் பொழுது எனக்கு பெரும் வியப்பேற்படுகிறது "- கவிஞன் கதே
- "தொழிலில் வெற்றியும் தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை ,மனப்பன்மையினல்தான் நிர்ணயிக்கப்படுகிறது "- டாக்டர் வால்டர் ஸ்கட்
- "நாம் என்ன நினைக்கிறோமோ ,அதுவாகத்தான் நாம் இருக்கிறோம் .நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும் அதுதான் நிர்ணயிக்கிறது "- டாக்டர் எம்.ஆர். காப்மேயர்
- "ஒருவன் எதை நினைக்கிறானோ ,அதுவாகவே இருக்கிறான் "-பைபிள்
- "நாம் இப்போது எப்படி இருக்கிறோமோ என்பது இதற்கு முன் நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது "-புத்தர்
No comments:
Post a Comment