வெற்றியின் இரகசியம் என்ன என்பதை எனக்கு புரியவைத்தார் எனது நண்பன். அன்மையில் எனது நண்பரெருவரை சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது ,அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடியபின் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் அது எதுவெனில் வெற்றியின் இரகசியம் என்ன? என்பதாகும்
எனக்கு தெரிந்தமட்டில் நான் கூறிய விடையாதெனில்
எனக்கு தெரிந்தமட்டில் நான் கூறிய விடையாதெனில்
- அதிர்ஷ்டம்
- கடவுளின் துணை
- முகம் கொடுத்த தோல்விகள்
- விடாமுயர்ச்சி என நிறைய சொன்னேன்
- புன்னகை
நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார், ஒரு கதை சொல்லுகிறேன் விடையை சரியாக கூறவேண்டும் என்றார்,நானும் சரி என்று சொல்ல கதையை சொல்ல ஆரம்பித்தார்.
மிக பிரசித்திபெற்ற கோவிலின் மூலஸ்தானத்தில் இருக்கும் விக்கிரமும் மூலஸ்தான வாசலில் இருக்கும் படிக்கலும் வாக்குவாதம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
அது யாதெனில் படிக்கல் விக்கிரகத்திடம் கேட்டது நாம் இருவரும் ஒரே கல்லிருந்து செதுக்கப்பட்டவர்கள்.
இருக்கும் இடம்மாத்திரமே வித்தியாசமானது, பக்தர்கள் உன்னை தரிசிக்க வரும்போது சிலர் என்னைத் தாண்டியும் , சிலர் மிதித்தும் உன்னிடமே வருகிறார்கள், ஏன்? இவர்கள் முட்டாள்களாக உள்ளனர் இருவரும் ஒரே கல்லுதானே?
அதற்கு விக்கிரகம் என்ன பதில் சொல்லியிருக்கும் இதான் கேள்வி எனக்கு சரியான விடையை கூறவேண்டும், விடைதெரியாவிடில் இன்றைய மதிய உணவுக்கான முழுச்செலவையும் பொறுப்பேற்கவேண்டும் இதுதான் நண்பனின் கடைசி வேண்டுகொள்.
நான் மேற்கூறிய வெற்றியின் இரகசியத்துக்கான விடைகளைக் கூறினேன் .நண்பன் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை .சரி இன்றைய மதிய உணவுக்கான செலவை ஏற்கிறேன் என்ற பின் மிகச்சரியான விடையை கூறினார்.
விக்கிரகம் சொல்லிச்சி நாம் இருவரும் ஒரே கல்லிருந்துதான், ஒரே நோக்கத்திற்காக செதுக்கப்பட்டோம் ,நீ உளியின் சில அடிகளை தாங்கமுடியாமல் உடைந்தாய், பின் உன்னை படிக்கல்லாக மாற்றினார் சிற்பி.ஆனால் நான் உளியின் அடிகள் அனைத்தையும் தாங்கியதால் என்னை விக்கிரகமாக மாற்றினார் சிற்பி.
இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும் வெற்றியின் இரகசியம்.
நீங்கள் எதுவாக இருக்கவிரும்புகிறீர்கள் படிக்கல்லாகவா? விக்கிரமாகவா?
தயவுசெய்து உங்களுடைய கருத்துக்களை Comments ன் ஊடாக பகிரவும்
நீங்கள் எதுவாக இருக்கவிரும்புகிறீர்கள் படிக்கல்லாகவா? விக்கிரமாகவா?
வெற்றியின் இரகசியம் சில
- எப்படிப் பட்ட சிந்தனையும் ,மனோபாவமும் இருந்தால் ஒருவன் நினைத்ததை சாதிக்க முடியும்.?
- தோல்வியைப் பற்றிய பயம் இருக்கக்கூடாது.
- மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற தயக்கம் இருக்கக் கூடாது.
- எந்த ஒரு செயலையும் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு செய்ய வேண்டும்
- யாரிடமும் எதையும் இரகசியமாக சொன்னால் எளிதாக நம்பிவிடுகிறார்கள்...! ஆகவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் குறிப்பாக பெண்கள் மத்தியில் இச்செயற்பாடானது அதிகம் உள்ளது.
தயவுசெய்து உங்களுடைய கருத்துக்களை Comments ன் ஊடாக பகிரவும்
Good.
ReplyDeleteநன்றி ஜயா
DeleteBest article for secret of success
ReplyDeleteவெற்றி நண்பா
ReplyDeleteMikavum nanrakavullathu unkaludaiya eluththarrail ennum menpaduththinal mikavum nanraka erukkum
ReplyDeleteவெற்றியின் இரகசியத்தை மறைமுகமாக சொல்லியிருப்பது மிகவும் நல்லது,என்னைப்பொறுத்தவரை வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு நாம் பல சோதனைகளை தாண்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இவ் சோதனைகள் அனைத்தும் உருவாகக்கப்படுவதும் நம்மாலே.
ReplyDeleteபொதுவாக எந்தவெரு வேளையிலும் நோக்கம் சிதராமல் இருந்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும்
DeleteVery good story for success
ReplyDelete