Thursday, March 21, 2013

வாழ்க்கையின் இரகசியம்

இரகசியம் இரகசியமாக இருக்கவேண்டியதொன்றாகும்.இரகசியம் எது என்றே தெரியாதவர்களும் இச் சமூகத்திலுள்ளனர். இப்படிப்பட்டவர்களிடம் சற்று அவதானத்துடன் நடந்துகொள்ளவேண்டும் இவர்களை அனுபவரீதீயாகத்தான் கண்டுகொள்ளவியலும்.
அது இருக்கட்டும் ,
  • எனக்கு வேண்டியது வாழ்க்கையின் இரகசியம்?
  • உண்மையில் வாழ்க்கையின் இரகசியத்தை அறிந்தால் என்ன நடக்கும்?
  • வாழ்க்கையின் இரகசியத்தை அறிந்தவர்கள் உள்ளனரா? ஆம் எனின் யார் அவர்கள்?(ரிஷிகள்?,முனிவர்கள்?,மகான்கள்?.....................???)
  • மதங்கள் போதிப்பதென்ன?
  • இயற்கை போதிப்பது என்ன? எவ்வாறு வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டுள்ளது?
  • கடவுள் இருப்பது உண்மையா?
  • ஏன் ஒரே ஒரு கடவுளை உலகத்திலுள்ளவர்களினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.?
  • போர் நடப்பதன் காரணம்யாது?(மதத்தின் பேரால்,நாட்டுக்கு நாடு,சாதிக்கு சாதி)
  • சில கண்டுபிடிப்புக்கள் நடைபொறுவது எதனால்?
இப்படியாக எமது வாழ்க்கையில் பல இரகசியங்கள் மறைக்கபட்ட வண்ணமாகவேயுள்ளது.

என்னைப்பொறுத்தவரை வாழ்க்கையின் இரகசியத்தை மனிதனால் நிச்சயமாக அறியலாம் எப்ப என்றால் மூடநம்பிக்கையை முற்றுமுழுதாக இவ்வுலகத்திலிருந்து அகற்றும் வரை.

ஏன் என்றால் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றையும் நிகழ்காலத்தில் முழுநிறைவாக அனுபவிக்கும் மனிதர்களின் வாழ்க்கைப்பயணத்தைப் பார்போமானால் அவர்கள் எல்லோரும் மூடநம்பிக்கைக்கு எதிரானவர்கலாகும்.

அதேநேரத்தில் மூடநம்பிக்கையை மற்றவர்களுக்கு புகட்டி வாழ்க்கையின் இரகசியத்தை இவர்கள் இரகசியமாக வைத்துள்ளனர்.

வாழ்க்கையின் இரகசியத்தை அறியவேண்டுமெனில் -ஏதோவொரு விருப்பமான துறையில் முழுக்கவனத்தையும் செலுத்தினால் நிச்சயமாக வாழ்க்கையின் இரகசியம் என்னவென்று தெரியும் அதே நேரத்தில் இயற்கையானது முழு உதவிகளை வழங்கும் என்பது மிக மிக உண்மையானதாகும்.

தயவு செய்து உங்கள் கருத்துக்களை comments boxன் ஊடாக  பகிர்வதன் மூலம்  அறியாத நிறைய விடயங்களை அறியலாம்.


No comments:

Post a Comment

adw