Monday, August 12, 2019

இருள் | தத்துவம்

வெளிச்சத்தின் குறைந்த அளவே இருள் ஆகும்  அதேபோல் குளிர் என்பது வெப்பத்தின் குறைந்த அளவே ஆகும் இதை சொன்னவர் ஓர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி அல்பிரட் ஐனின்ரின் ஆவார்

ஆனால் முன்னோர் இருளில்தான் அதிக சக்தி உள்ள என்பதை அறிந்துள்ளனர் என்பதற்கான விளக்கம் கீழே 

இருள்
இருள் தத்துவம்

இருள் என்பது சக்தியா? என்னும் கேள்வி பலருக்கும் ஏற்படலாம் ஆனால் அதுவே உண்மை.

நமது பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள், பால்வெளிகள் அனைத்தும் வெரும் 5% மட்டுமே உள்ளது. 

இருள் சக்தி தான் 68% பிரபஞ்சத்தில் உள்ளது. இருள் சக்தி தான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் இயக்குகிறது.

பால்வெளி மண்டலம் கீழே விழாமல் ஒருவித ஈர்ப்பு விசையால் சுற்றிக்கொண்டுள்ளது என்பது தெரியும் அந்த ஈர்ப்பு விசையைக் கொடுப்பது இருள் சக்தி தான். 
காற்றைப் போலவே நம்மைச் சுற்றியும் இருள் சக்தி தான் நிறைந்துள்ளது. 

இந்த இருள் சக்தி தான் நமக்கான ஆற்றலைக் கொடுக்கிறது. நமக்கான சக்தியைக் கொடுக்கிறது. 

இருள் சக்தியில் இருந்தே நமக்கு ஆற்றல் கிடைப்பதால் தான் தூக்கத்தை விழிப்புணர்வற்ற தியானம் என்று கூறுகிறோம். 

உங்ளை நீங்கள் சோதனை செய்து பாருங்கள். நீங்கள் ஒன்றை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டுமெனில் கண்களை மூடி சிந்தனை செய்வது ஏன்?

தியானம் செய்யும் போது கண்களை மூடி தியானம் செய்வது ஏன்?

சித்தர்கள் இருள் நிறைந்த குகைகளில் தியானம் செய்வது ஏன்?

1 comment:

adw