Monday, December 10, 2018

கதிர்வீச்சு

கதிர்வீச்சு என்பது சக்தியின் ஓர் வடிவமாகும் உதாரணத்திற்கு சக்தியின் வடிவங்களாக ஒளி,ஒலி,வெப்பம்,மின்சாரம்,காந்தம் போன்றனவற்றை பாடசாலை படிப்பில் படித்திருக்கிறோம் ஆனால் கதிர்வீச்சு சம்பந்தமான அடிப்படை விளக்கங்களே நாம் அறிந்திருக்க வாய்புண்டு, இதன் சிறு விளக்கம் கீழே

2004.12.26 இன் பிற்பாடு சுனாமி பற்றிய அறிவும்  அதன் தாக்கம்,வீரியம் போன்ற பல வகையான  அனுபமும் கிடைத்துள்ளது.இன்னொரு முறை சுனாமி வந்தால் அதை எதிர்கொள்ள வேண்டிய சக்தியும் தொழிநுட்ப்ப வசதிகளும் உண்டு இச் சுனாமியானது இயற்கையாகவே உருவாவதாகும் ஆனால் மனிதனால் உருவாக்கப்படும் கதிரியல் சுனாமியானது (Radiation Tsunami) 5G தொழிநுட்பத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறது.

இது 2.0 படத்தில் குருவிகள் மற்றும் பறவைகள் கதிர்வீச்சு தாக்கத்தினால் அதன் சிந்தனை மையம் குழப்பப்பட்டு மரணிக்கின்றன அதற்கு காரணம் cellphone tower இல் பிறப்பிக்கப்படும் கதிர்வீச்சின் அளவின் அதிகரிப்பே காரணம் ,

கதிர்வீச்சில் இரண்டு வகை உண்டு

  1. அயனாக்கக் கதிர்வீச்சு (Ionizing Radiation)
  2. அயனாக்கக் அல்லாத கதிர்வீச்சு (Non Ionizing Radiation)
இதில் X-Ray எடுக்க,புற்றுநோய் மருத்துவம்,மருத்துவ உபகரணங்களை தொற்று நீக்க போன்றவற்றிக்கு அயனாக்கக்  கதிர்வீச்சு (Ionizing Radiation) பயன்படுகிறது.

தொலைகாட்சி,வானொலி,கையடக்க தொலைபேசி,மைக்றோவ்வேவ் அவண் என்பன அயனாக்கக் அல்லாத கதிர்வீச்சு (Non Ionizing Radiation) இல் தொழில்படுபவையாகும்.

இவ்விரு வகையான கதிர்வீச்சசால் பாதிக்கப்பட்ட மனிதனுக்கும் விலங்குகளுக்கும் மறுமீட்பு என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

கதீர்வீச்சை கண்டுபிடித்த மனிதனுக்கு பாராட்டுக்களும்,பரிசில்களும் ஆனால் இப் பூமியில் வாழும் மனிதக்கோ விலங்கினத்திற்கோ இதனால்  ஏற்படும் பாதிப்பை அறிந்திருந்தும் ஏன்? மனிதர்களாகிய எம்மால் இதை எதிர்க்கமுடியவில்லை 


கதிர்வீச்சு
கதிர்வீச்சு

இயற்கையை பாருங்கள் வின்வெளியில் இருந்துவரும் மிக சக்திவாய்ந்த கதிர்வீச்சினால் எம்மையும் பிற உயிாினங்களையும் பாதுகாக்க  இப் பூமிப்பந்தானது  பற்பல வாயுப்படைகளால் இக் கதிர்கள் ஊடருக்கும் போதே தடுக்கப்படுகின்றன ஆனால் அவற்றில் சில வகையான குறைந்தளவு தீங்கிளைக்கும் கதிர்வீச்சே இப்பூமியை வந்தடைகிறது.இவ் இயற்கை நடவடிக்கைகளில் ஏதோவொரு நன்மை இருக்குமே தவிர தீமை இருக்காது.

அறிவியல் முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு தனக்குத்தானே புதைகுழியை மனிதன் மறைமுகமாக தோன்டுகிறான் என்பது யாருக்கும் தெரிவதில்லை ஏனெனில் சோம்பலுக்கும் சொகுசு வாழ்க்கைக்கும் அடிமையாகுவதே ஆகும். 

ஆகவே கதிர்வீச்சென்பது நன்மை தருவதைக்காட்டிலும் அதிகமான தீங்கையே விளைவிக்கின்றது ,இதன் பாதிப்பானது பரம்பரையாக கடத்தப்படுவதனால் எமது எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல 

ALARA -As Low As Reasonably Achievable  என்பது எல்லா வகையான கதிரியல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைப்பிடிக்கவேண்டிய கொள்கையாகும்.இது மூன்று முக்கிய விடையங்களை கொண்டுள்ளது அவையாவன
  1. நேரம்- மிக குறைவான நேரத்தில் வேலையை முடித்தல்
  2. தூரம்- தூரம் கூடினால் தலைகீழ் வர்க்க சட்டம் (inverse square law )
  3. பாதுகாப்பு கவசம்- இதற்கு சுவரின் தடிப்பு , ஈயத்தால் செய்த கண்ணாடி, ஆடை என்பனவாகும்
ஆகவே விளிப்புடன் இருக்கவும் 

No comments:

Post a Comment

adw