Tuesday, September 16, 2014

வண்டி - வாகனம் தத்துவம்-(Vehicle in Tamil)

உடல் உழைப்பின்றி ஓர் இடத்தில் இருந்து இந்னொரு இடத்திற்கு பொருட்களையோ மனிதனையோ ஏற்றிச் செல்லும் சாதனத்தை வாகனம் எனலாம் இது உயிருள்ளவையாகவோ .உயிரற்றவையாகவே இருக்கலாம்.

இந்து மதத்தின் சிறப்புக்களில் ஒன்றாக ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வெரு வாகனம் (மிருகம்) இருப்பதைக்காணலாம்,இதற்கு விளக்கங்கள் உள்ளன.

வரலாற்று காவியமான இராமாயணத்தில் இராவணன் சீதையை இலங்கைக்கு புட்பக விமானத்தில் கடல் மார்க்கமாக கடத்திச்சென்றான் என்று வரலாற்றுக்கதையில் வாகனம் இருந்தமைக்கான சான்றும் உள்ளது.

வாகனம் கண்டுபிடிப்பதற்கான மூல காரணம் யாதெனில்,
மனிதன் ஓர் இடத்தை விரைவாக அடையவேண்டுமெனில்
  • அவனுக்கு இறைக்கைள் இருக்கவேண்டும் அல்லது 
  • மிருகங்களைப்போல் வேகமாக ஓட முடியனும்
 அப்படி இருப்பின், குறிப்பிட்ட இடத்தை வெகு இலகுவாக அடையமுடியும்.ஆனால் மனிதனுக்கோ கடவுள் ஆறறிவை மாத்திரமே கொடுத்துள்ளார்,இருப்பினும்
விஞ்ஞான வளர்ச்சியின் நிமிர்த்தம் மனிதன் தற்காலத்தில் மூவுலங்களுக்கும் பாதுகாப்பான முறையில் சென்று வரும் வகையிலான வாகனங்களை கண்டுபிடித்துள்ளான்

  • ஆகாயத்தில்- விமானங்களையும்
  • தரையில்- மோட்டார் வாகனங்களையும்
  • நீரில்- கப்பல்களையும் 

வாகனத்தின் நன்மை தீமை

நன்மை
  1. போக்குவரத்து இலகுவாகப்பட்டுள்ளது
  2. வியாபாரம் வளர்ச்சியடைந்துள்ளது.
  3. பல நாடுகளுக்கு சுற்றுலா செல்லாம்
  4. அவசர சிகிச்சைக்காக ஆகாயமார்க்கமாக நோயாளியை உடனடியாக வசதி கூடிய மருத்துவமனைக்கு இடமாற்றுதல்
தீமை
  1. விபத்துக்களினால் உயிரிளப்புக்கள் (சாலை-மனிதன் ,மிருகம் ஆகாயம்- பறவைகள் நீர்- நீர் வாழ் உயிரினங்கள்)
  2. சத்தம், புகை,எண்னைக்கசிவு ஆகியவற்றினால் சுற்றுச் சூழல்,சமூத்திரங்கள்,ஆகாயம் மாசுபட்டுக் கொண்டிருக்கின்றன.
  3. போக்குவரத்துக்காக சாலையை பராமரிப்புச் செலவு,சாலை அமைக்கபயன்படும் இரசாயனக்கலவையினால் அருகில் உள்ள மரங்களுக்கு நஞ்சாகிறது.
  4. சாலை அருகில் உள்ள நிழல் தரும் மரங்களை வெட்டுதல்.
  5. நாட்டுக்கு நாடு யுத்தம் (யுத்த வாகனங்கள்)
  6. பராமரிப்புச் செலவு
  7. உடலுழைப்பு இல்லாமையினால் பல நோய்களுக்கு உள்ளாதல்
  8. எரிபொருள் செலவு
  9. உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு கனிமங்களின் அளவு உலகில் குறைந்துள்ளது
தற்போது ஜரோப்பிய வாழ்க்கை முறையானது ஆசிய நாடுகளிலும் ஜரோப்பாவில் வாழ்க்கை முறையானது ஆசிய நாடுகளைப்போல் உடலுழைப்புக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக அறியமுடிகிறது.

வாகனத்தின் மறு பெயர்கள்

1.ஊர்தி
2.வண்டி

வாகனம் பயன்படும் துறைகள்

  1. விவசாயம்- உழவு ,அறுவடை,விளைச்சலை சந்தைப்படுத்த.
  2. மீன் பிடி தொழில்-படகு, கப்பல்
  3. காவல் நிலையம் (பொலிஸ்)
  4. இராணுவம்- யுத்த டாங்கி, உலங்கூர்தி, வானூர்திகள்
  5. பேரூந்துகள்

வண்டி என்பது ஒரு நகரும் இயந்திரமாகும் ஆகவே வண்டி /வாகனத்திற்கு அன்பு செலுத்தாமல் மனிதநேயத்திற்கு அன்பு செலுத்துங்கள்

No comments:

Post a Comment

adw