Monday, June 24, 2013

முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் தத்துவ சிந்தனைகள்

முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமின் சில முக்கியமான தத்துவ சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
Dr. Abthulkalam with Veena
Dr.A.P.J.Abdul Kalam with Veena
  • அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்- கடமையைப்பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
  • முட்டாள் தனது முட்டாள் தனத்தை விளங்கிக்கொள்வதால் புத்திசாலியாகிறான்- புத்திசாலி தனது புத்தியை விளங்கிக்கொள்வதால் முட்டாளாகிறான்
  • கஷ்டம் வரும்போது கண்ணைமூடாதே அது உன்னை கொன்றுவிடும்-கண்ணை திறந்துபார் அதை நீ வென்றுவிடலாம்.
  • நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமையில்லாதவர்களாக இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.
  • சிக்கல்களை எதிர்கொள்ளும்போதே சில திறமைகள் வெளிப்படுகின்றன.
  • வாய்ப்புக்காக காத்திராதே...... வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்........
  • கனவு என்பது தூங்கும் போது வருவதல்ல, உன்னை தூங்கவிடாமல் பண்ணுவதேயாகும்.
  • ஒரு நிஜமான தலைவன் தோல்வி காணும்போது அத்தோல்வியை தன்னுடையதாக கருதுவான். வெற்றி எனும்போது அது தன்னுடைய குழுவின் வெற்றியாக கொண்டாடுவான்.
  • நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார்முன்னேயும்,எப்பேதுமே மண்டியிடுவதில்லை.
  • சிந்திக்கத் தெரிந்தவனக்கு ஆலோசனை தேவையில்லை,துன்பங்களை சந்திக்கத்தெரிந்தவனக்கு தேல்வியேயில்லை.
  • நேர்மை மற்றும் உண்மை இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 
  • முடியாது என்ற நோய் முற்றாக மறந்துவிட வேண்டும் இல்லாவிடில் முடியுமானவற்றை அடைந்திருக்க முடியாது. 
  • மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவை 
  • சிந்தனை செய், தெளிவான முடிவை எடு 
 அப்துல் கலாமின் சிந்தனைகள்

"நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால்
நீ யார் என்பது முக்கியமல்ல,
உனது மனது எதை விரும்புகிறதோ
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்"



அப்துல் கலாமின் கவிதை

ஒரு முறை வந்தால் 
அது கனவு.
இருமுறை வந்தால்
அது ஆசை.
பல முறை வந்தால்
அது இலட்சியம்.

- அப்துல் கலாம்


காதலை தேடி ஓடாதே
தேற்று விடுவாய்... !! உன்
வாழ்க்கையில்!!

அதுவே உன் வாழ்க்கையை 
தேடி நீ ஓடிப்பார்......!!
வென்று விடுவாய்  உன் 
காதலை !!!

- அப்துல் கலாம்
தொடரும்...

1 comment:

  1. மேலும் இதுபோன்ற கவிதை வரிகளை படிக்க 👇

    Abdul kalam kavithai in tamil

    ReplyDelete

adw