சிறு கதை மூலம் நம்பிக்கை இழத்தல் பற்றி விளக்கம்
- ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
- தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
- வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
- தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
- ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
- ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
- எது அந்த தவளையை கொன்றது...?
- பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
ஆனால், உண்மை என்னவென்றால்
"எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
- மன ரீதியாக,
- உடல் ரீதியாக,
- பண ரீதியாக
மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...
விழுந்தால் அழாதே . . .எழுந்திரு
தோற்றால் புலம்பாதே . . .போராடு
கிண்டலடித்தால் கலங்காதே . . .மன்னித்துவிடு
தள்ளினால் தளராதே . . .துள்ளியெழு
நஷ்டப்பட்டால் நடுங்காதே . .நிதானமாய் யோசி
ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .எதிர்த்து நில்
நோய் வந்தால் நொந்துபோகாதே . .நம்பிக்கை வை
கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .கலங்காமலிரு
உதாசீனப்படுத்தினால் உளறாதே . .உயர்ந்து காட்டு
கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .அடைந்து காட்டு
மொத்தத்தில் நீ பலமாவாய்
சித்தத்தில் நீ பக்குவமாவாய்
உன்னால் முடியும்
உயர முடியும் . . .
உதவ முடியும் . . .
உதவ முடியும் . . .
உனக்கு உதவ நீ தான் உண்டு
உன்னை உயர்த்த நீ தான் . . . ⚜நம்பு⚜ . .
உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . .
நீயே பாறை.நீயே உளி . . .
நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . .
நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . .
நீயே வளர்வாய் . நீயே அனுபவிப்பாய் . . .
நீயே நதி . . . நீயே ஓடு . . .
நீயே வழி . . . நீயே பயணி . . .
நீயே பலம் . . . நீயே சக்தி . . .
நீயே ஜெயிப்பாய்
எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே
No comments:
Post a Comment