Sunday, May 17, 2015

மதுபானம் - Alcohol in Tamil

ஒரு சிலருக்கு  மதுபானம்  என்றால்  விருப்பமாகவும் சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கும்

எப்படி இருப்பினும் எமது உடலானது  உணவுகள் செமிபாடு அடையவதற்கு  அளவான மதுவை  கட்டாயமாக உற்பத்தி செய்கிறது இதை எவராலும் மறுக்கமுடியாது.

மதுபானம் என்றால் ஏதேனும் ஒரு குடிபானத்தில் ,வேதியலின் கூற்றுப்படி எத்தனோலின் அளவு 0.5% மோ அல்லது அதற்கு மேலே இருப்பின் அவ்வகையான குடிபானங்கள் மதுபானம் எனப்படும். இதை ஆங்கிலத்தில் அல்ககோல் ரிங் (Alcoholic Drink) என்பார்கள்.

ஏத்தானலின்  இரசாயனக் குறியீடு C2H5OH  அல்லது  CH3-CH2-OH என்றும் குறிப்பிடலாம்.

ஏத்தனால் என்னும் வேதியல் ஆனது நேரடியாக நரம்பு மண்டலத்தை (மூளையின் தொழிற்பாட்டில் தலையிடுதல்) தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருகிறது அதாவது இது உளவியலுடன் இணைந்து மனதை ஓரு வித்தியாசமான மகிழ்ச்சி நிலைக்கு உட்படுத்துகிறது.

இவ் எத்தனால் ஆனது தீப்பற்றிக்கொள்ளும் தன்மையையும், நீரில் இலகுவாக கரையும் தன்மையைக்கொண்ட நிறமற்ற,சுவையற்ற,மணமற்ற,எவ்வித சத்தும் அற்ற கரைசலாகும்.

இதனை இயற்கையாவும்  , செயற்கையாகவும் உற்பத்தி செய்யலாம்.இந்த வித்தை மனிதனுக்கு மாத்திரமே தெரிந்தவிடயமாகும்.

பொதுவாக பாவனையிள்ள மதுபான வகைகள் மூன்று பிரிவாக பிரிக்கலாம் 


 • வைன் (Wine)  இவற்றில் 12%-20% எத்தனால் கலந்தவை
 • பீர் (Beer)  இவற்றில் 4%-15% எத்தனால் கலந்தவை
 • காய்ச்சி வடித்த எரிசாராயம் (Distilled spirits  )  (உ-ம் : ஜின்,ரம்,வெட்கா,அரக், பிரண்டி,விஸ்கி,டிக்கிலா,கசிப்பு இவற்றில் 40% க்கு மேலான எத்தனால் கலந்தவை)
மேலே சொன்னது போல் எத்தனாலை இயற்கையாக உற்பத்தி செய்வதென்றால்,  பழங்கள் ,தானியங்களை நொதியச்செய்வதனால் எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது அதாவது நன்மைசெய்யும் பக்ரீரியாக்களை (ஈஸ்ட் )  மற்றும் சீனி தன்மையுள்ள பழங்கள் , தானியங்களுடன் சேர்த்து  சில இரசாயன மாற்றத்தினால்  எத்தனால் உற்பத்தியாகிறது.

இயற்கைமுறை மூலம் உற்பத்தி செய்யப்படும் மதுபான (எத்தனால் ) வகைகளில் பெரும்பாலும் பக்கவிளைவுகள் மிக மிகக் குறைவாகும் இதன் காரணமாக ஒவ்வொரு நாடும் அந்நாட்டில் விளையும் பழங்கள் மற்றும் தானியங்களைக்கொண்டு பல வித்தியாசமான மதுபானங்களை உற்பத்தி செய்கிறார்கள். அவற்றின் பெயர், நிறம்,சுவை,எத்தனாலின் அளவு என்பன நாட்டுக்கு நாடு வித்தியாசம்

நாடும் மதுபானமும் (List of  Country name with alcoholic beverages)

 1. யப்பான் 
  1. சாகி (Sake) -அரிசி 
  2. அவாமொரி (Awamori)- அரிசி 
  3. ஷூச்சூ (Shochu)-அவித்த கோதுமை 
 2. கொரிய 
  1. மகெஒல்லி  (Mageolli) -அரிசி 
  2. சுங்க்ஜு (Chungju)- அரிசி 
  3. சொஜு (​Soju)-அரிசி 
 3. மொங்கோலியா 
  1. அர்க்ஹி (Arkhi) - பால் 
  2.  குமுஸ் (kumis) - பால்
  3. கேபிர் (Kefir) - பால்
  4. ப்ளானட் (Blaand) - பால்
 4. சீனா 
  1.  ஹுஅங்க்ஜிஉ (Huangjiu) -அரிசி 
  2. சௌஜிஉ (Choujiu) - அரிசி 
  3. பைஜிஜு (Baijiu) -அரிசி 
 5. பிலிப்பைன்ஸ்
  1. சாராயம் (Arrak ) - தென்னங் கள்
  2.  துபா (Tuba) - ஒரு வகையான மரச்சாறு
 6. இந்தோனீசியா
  1. டோக் (Tuak) - ஒரு வகையான மரச்சாறு
 7. வியட்நாம் 
  1. சுஒ ஹொட் (Chuoi hot) - வாழைப்பழம் 
  2. ருஔகௌ  (Ruou Gao) - அரிசி 
 8. இந்தியா 
  1. சொண்டி (Sonti) - அரிசி 
  2. கள்ளு (Toddy) - தொன்னம் பூ
  3. சாராயம் (Arrak  ) - தென்னங் கள்
 9. நேபாளம் 
  1. தவோன் (Thwon) -அரிசி 
  2. ஐலா (Aila) - அரிசி 
  3. தொங்கப (Tongba) -திணை, வரகு,சாமை 
 10. இலங்கை
  1. கள்ளு (Toddy) - தொன்னம் பூ
  2. சாராயம் (Arrak  ) - கரும்பு ,தென்னங் கள்
 11. ஆபிரிக்கா நாடுகள்
  1.  ம்பேக்  (Mbeg) - வாழைப்பழம்
  2. பிளிபிலி (Bilibili) -சோளம் ,திணை
  3. பிடோ  (Pito) - சோளம் ,திணை
  4. புருகுட்டு (Burukutu)- சோளம் ,திணை
  5. தேஜி  (teji) - தேன் 
 12. துருக்கி
  1. ராக்கிய (Rakia)- திராட்சை 
  2. பச்டிஸ் (Pastis) - பழங்களின் காய்ந்த சக்கை (பிழிவுச்சக்கை)
  3. சம்புகா (Sambuca) - பழங்களின் காய்ந்த சக்கை (பிழிவுச்சக்கை)
 13. பிரான்ஸ்
  1. பெர்ரி (Perry) - பியர்ஸ் காய் 
  2. மார்க் (Marc) - பழங்களின் காய்ந்த சக்கை (பிழிவுச்சக்கை)
  3. கோக் நாக் (Cognac) - திராட்சை
  4. வெர்மௌத்  (Vermouth)-திராட்சை
 14. பல்கேரிய ,ஹங்கேரி 
  1.  கைசிஎவ  (kaisieva) - சர்க்கரை பாதாமி (apricot)
  2. பளிங்கா (palinka)- சர்க்கரை பாதாமி (apricot)
 15. இஸ்பெயின் 
  1. ஒருஜோ (Orujo)- பழங்களின் காய்ந்த சக்கை (பிழிவுச்சக்கை)
 16. இத்தாலி 
  1. க்ரப்பா (Grappa) -பழங்களின் காய்ந்த சக்கை (பிழிவுச்சக்கை)
 17. ஜேர்மன் 
  1. கோரன் (Korn)- புல்லரிசி (Rye)
  2. ப்ரன்ன்த்வீன் (Branntwein) - திராட்சை
  3. வேயசன் கோர்ன் (Weizenkorn)-கோதுமை
 18. ரஷ்யா 
  1. வொட்கா (Vodka) - கோதுமை,புல்லரிசி,சோளம்
  2. ஹோரில்கா  (Horilka)-உருளைக்கிழங்கு
 19. பிறேசில் 
  1. டிகுஇர (Tiguira) - கூவைக்கிழங்கு ஈ கெப்பக்கிழங்கு , மரவள்ளிக்கிழங்கு , குச்சிக்கிழங்கு  ஆகியவற்றின் மா
 20. மெச்சிக்கோ 
  1.  தெபாசே (Tepache) -அன்னாசி 
  2. டெகுஇல்லா  (Teguila) - கருங் கற்றாழை
  3. மேசகல் (Mezcal)- கருங் கற்றாழை
  4. ரயிசில்லா (Raicilla)- கருங் கற்றாழை
மேலே கூறப்பட்வை அனைத்து மதுபானங்களில் இயற்கையாகப் பெறப்பட்ட எத்தனால் உ‌ள்ளது. 

சில நாடுகளில் வேதியல் முறையினால் எத்தனால் செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பபடுகிறது.
இவ் எத்தனாலுக்கு நிறம் ,சுவை,மணம் என்பவற்றை பக்கவமாகச் சேர்த்து போலி மதுபான வகைகள் சந்தையில் விற்கப்படுகின்றன.இவற்றை குடிப்பதனால் மனிதனுக்கு பல்வேறுபட்ட நோய் நொடிகளுக்கு உள் ஆளாகிறான், அவனது ஆயுட்காலமும் விரைவாக குறைகிறது.

அவனது இறப்பானது மற்றவர்களுக்கு பாடமாக இருப்பினும் மனிதன் மீண்டும் அதையே தொடர்ந்து பின்பற்றிக்கொண்டுதான் இருக்கிறான்.
மதுபானம் - Alcohol in Tamil
மதுபானம் - Alcohol in Tamil

எத்தனாலின் பயன்கள்

 • அமெரிக்கா,ஐரோப்பா ,யப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் வாகணங்களுக்கு எரிபொருளாக எத்தனால் 85%  மும் பெற்றோல் 15% மும் கலந்து விற்கப்படுகிறது இதன் பெயர் E85 ஆகும்.
 • வைத்திய துறையில் தொற்று நீக்கியாக பயன்படுகிறது.
 • எத்தனாலின் தீ சுவாலையை இரசாயண ஆய்வுகளுக்கு பயன்படுதல்
 • பல வாசனைத் திரவியங்களில் சேர்க்கப்பட்டுள்ளது
 • நட்பை உறுதியாக்கிக்கொள்ள மதுபானப் பாட்டிகளில்

2 comments:

 1. மன நோய் தானாக தான் தீர வழியுண்டு...

  ReplyDelete
  Replies
  1. சற்று முயற்ச்சி எடுத்துப்பார்போமா? ஏதேனும் வழி இருக்குதா என்று?

   Delete