புத்தகம் என்றால் என்ன?
எதிர்காலத்திற்காக பிரயோசனப்படும் விதத்தில் குற்றமற்ற தகவல்கள்,எண்ணங்கள்,கருத்துக்கள் என்பனவற்றை எழுத்து,ஓவிய வடிவத்தில் நிகழ்காலத்தில் சேமித்து வைக்கப்படும் பொருள் அல்லது கருவி புத்தகமாகும்.
"ஒரு நாட்டின் பெருமையை அங்கு பேனிப்பாதுகாக்கப்படும் அறிவு சார்ந்த மூல புத்ததங்களின் எண்ணிக்கையில் தங்கியுள்ளது."
ஆதி காலத்தில் அதாவது கடதாசி,மை,எழுது கருவி என்பன கண்டுபிடிக்க முன்னர் தகவல்கள்,எண்ணங்கள்,கண்டுபிடிப்புகள் என்பன பதப்படுத்தப்பட்ட பனை ஓலை (ஏடு),கல் வெட்டுக்கள்,குகைச் சுவர்கள்,துணி,செப்புத்தகடுகள் என்பற்றின் மூலம் பாதுகாக்கப்பட்டதன் காரணமாக இன்று எமது கையில் மகாபாரதம்,இராமாயணம்,திருமந்திரம்,திருக்குறள்,ஆத்தி சூடி போன்ற எண்னற்ற புத்தகங்கள் எமது கையில் புரலுகின்றன. இதே போன்று ஒவ்வொரு நாட்டிலும் பழமைவாய்ந்த மதிப்புள்ள புத்தகங்கள் உள்ளன.
இப் புத்தகங்களினால் ஆதிகாலத்தவர்களின் அறிவு,வரலாறு,வாழ்க்கை வாழும் முறை போன்றவற்றை அறியக்கூடியதாவுள்ளது இதே போன்று மற்றைய நாடுகளிலும் முதற் புத்தகத்தின் மூலம் அறியலாம்.
இப் புத்தகங்களினால் ஆதிகாலத்தவர்களின் அறிவு,வரலாறு,வாழ்க்கை வாழும் முறை போன்றவற்றை அறியக்கூடியதாவுள்ளது இதே போன்று மற்றைய நாடுகளிலும் முதற் புத்தகத்தின் மூலம் அறியலாம்.
ஆனால் தற்போதைய காலத்தில் புத்தகம் மின்புத்தகவடிவத்தில் தகவல்கள் கணினியின் உதவியுடன் பாதுகாக்கப்படுகிறது இன்னும் சில ஆண்டுகளின் பின் மின்புத்தகத்தின் (மின்நூல்) அடுத்த தலைமுறையையும் காணலாம்.இம்முறையானது புத்தகங்களின் நகல்மூலம் பாதுகாக்கப்படும் முறையாகும்.
புத்தகத்தின் நன்மைகள்
- ஆய கலைகள் 64ன் வளர்ச்சி.
- ஞாபகமூட்டுதல்.
- நண்பனுக்கு இணையாதல்.
- காலத்தை பாதுகாத்தல்.
- பல கண்டுபிடிப்புக்களுக்கு உதவியாக இருத்தல் (உ-ம் : மருத்துவத்துறை,பொறியியல் துறைகளுக்கு)
- ஆதி காலத்தில் வாழ்ந்த அறிஞ்ஞர்களின் படைப்புகள் (உ-ம் : திருமந்திரம்,திருக்குறள்,ஆத்தி சூடி, .......)
- எந்வொரு செயலுக்கும் ஆதாரமாதல்
- மேடைப் பேச்சுகளுக்கு உருதுணையாதல்
- மூளையின் செயல்பாடுகளுக்கு உதவுதல்
- வியாபார நோக்கம் (உ-ம்: புத்தகக் கடை)
- நோபல் பரிசு கூட உள்ளது
- கையேடு ,குறிப்பேடு (பாவனைக்கான அறிவுறுத்தல் )
புனித புத்தகங்கள்
ஒவ்வொரு மதத்திற்கும்,மார்க்கத்திற்கும் ஒரு புனிதப்புத்தகம் ஒன்று உண்டு.
- இந்து மதம் - உபநிடம்,பகவத்கீதை
- கிறிஸ்தவம் - பைபில்
- இஸ்லாம் - குர்ரான்
- பௌத்தம் - மாகா பதம்
புத்தகத்தின் வகைகள்
- வரலாற்றுப் புத்தகம்
- கணிதப் புத்தகம்
- இலக்கியப் புத்தகம்
- இலக்கணப் புத்தகம்
- மருத்துவப் புத்தகம்
- பொறியியல் புத்தகம்
- அரசியல் புத்தகம்
- மின் புத்தகம்
- பாட்டுப் புத்தகம்
- தினப்பதிவேட்டுப் புத்தகம்
- கதைப் புத்தகம்
- ஓவியப் புத்தகம்
- விஞ்ஞானப் புத்தகம்
- பஞ்சாங்கப் புத்தகம்
- மந்திரப் புத்தகம்
- சட்டப் புத்தகம்
- உள நூல்
- பாலியல் நூல்
- எழுத்தாளர்
- பாஷை
- சொல்லப்படும் கருத்து.
- கடதாசி,மை,அச்சு என்பவற்றின் தரம்,உற்பத்தி நாடு.
- பக்கங்களின் எண்ணிக்கை
புத்தகங்களை பாதிக்கும் காரணிகள்
- சில பிராணிகளின் ஆதிக்கம் (உ-ம்: கறையான்,எழுத்தாணிப் பூச்சி,எலி )
- தீ
- நீர்
- இரசாயணங்கள்
- வறுமை
- கடதாசி,மை என்பவற்றின் தரம்
- புத்தகத்தின் அருமை தெரியாதிருத்தல்
- சோம்பல்
- தகவல்களை தெளிவாக விளங்கிக்கொள்ளாமை.
"நூல்கள் மீது அதிக ஆர்வமுள்ள ஒருவரைப் புத்தகப் பூச்சி அல்லது புத்தகப் புழு என்று அழைப்பதுண்டு. இவர்களை பெரும்பாலும் வாசிகசாலை,நூல் நிலையங்களில் காணமுடியும்"
ஒரு நூல் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.
- முன் அட்டை: தடித்த அட்டை அல்லது மெல்லிய அட்டை
- முன்பக்கத்தாள்
- தலைப்புப் பக்கம்
- உரிமப்பக்கம்
- பொருளடக்கம்
- படிமப் பட்டியல்
- அட்டவணைகள் பட்டியல்
- காணிக்கை
- அணிந்துரை
- முன்னுரை
- அறிமுகம்
- உள்ளுறை
- பின்னிணைப்பு
- பின்புறத் தாள்
- பின் அட்டை
- சொல்லடைவு
- பொருளடைவு
- குறிப்புகள்
- துணைநூல் பட்டியல்
புத்தகத்தின் மறு பெயர்கள்
- நூல்
- புக்
- ஏடு
- சுவடி
புத்தகம் |
No comments:
Post a Comment