Thursday, July 10, 2014

24 மணி நேர வாழ்க்கை

மனித வாழ்க்கையில் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையூம் என்பது பழமொழி அதாவது நன்மை செய்யின் நன்மையூம் தீமை செய்யின் தீமையூம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எமக்கு கிடைக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகங்களும் இல்லை

ஆகவே இறைவனின் கிருபையால் நாட்கள் நகருகின்றன. இதில்
ஒரு நாள் என்பது 24 மணி நேரங்களை கொண்டதாகும்.
இக்காலப்பகுதிக்குள் நாம் எவ்வளவோ வேலைகளைச் செய்கிறேம்.
அதில் பயனுள்ளதாக எதிர்காலத்தின் பசுமையை நினைவிற்கொண்டு எவ்வளவு நேரத்தை பயணுள்ளதாக செலவழித்தோம்? என்றுபார்த்தால்.

நேரத்தின் வேகமும் அதன் பெறுமதியும் நன்றாக விளங்கும்  
ஆகவே,

நம் ஒவ்வெரு மணித்துளியும் மிகப் பெறுமதிமிக்க நம் செல்வங்கள் 
எனவே
இந்த 24 மணி நேர வாழ்க்கையை வீணடிக்காமல் பயனுள்ளதாக மாற்றிக்கொண்டால் நம் எதிர்காலம் மிக மிக செல்வச்செழிப்புடன் விளங்கும் என்பதில் ஜயமில்லை

24 மணி நேர மணித்துளிகளை பயனுள்ளதாக மாற்றிக்ககொள்ள சிந்தனைகள் சில

  • நாளை நமக்காக காத்திருக்கிறது என்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • சோர்வை என்றும் வளர்க்க விடக்கூடாது.
  • பேசும் வார்த்தைகள் உள்ளத்தில் இருந்து வருபவை அதனால் வார்த்தை பிரயோகத்தில் கவனம் வேண்டும்.
  • வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் ,வந்த வாய்புக்களை மிக நன்றாக கையாள தெரிந்திருக்கவேண்டும்
  • முடியும் வரை வரை முயற்சி செய்யவேண்டும்  ( நம் நினைத்த செயல் வெற்றிபெறும் வரை).

வாழ்வின் சில முக்கிய படிகள் 

  • மிக நல்ல நாள் - இன்று
  • மிகப்பெரிய வெகுமதி- மன்னிப்பு
  • மிகவும் வேண்டியது- பணிவு
  • மிகவும் வேண்டாதது- வெறுப்பு
  • மிகப் பெரிய தேவை- சமயோஜித புத்தி
  • மிகப் பெரிய கொடிய நோய்- பேராசை
  • மிகவும் சுலபமானது- குற்றம் காணல்
  • மிகவும் கீழ்த்தரமானது-பொறாமை
  • நம்பக்கூடாதது-வதந்தி
  • ஆபத்தை விளைவிப்பது- அதிக பேச்சு
  • செய்ய வேண்டடியது- உதவி
  • விலக்க வேண்டியது-விவாதம்
  • உயர்வுக்கு வழி-உழைப்பு
  • நழுவவிடக் கூடாதது-வாய்ப்பு
  • பிரியக் கூடாதது- நட்பு
  • மறக்கக் கூடியது-நாம் செய்த உதவிகள்
  • மறக்கக் கூடாதது-நன்றி


No comments:

Post a Comment

adw