Tuesday, July 1, 2014

பசி தத்துவங்கள்

பசி என்பது உடலின் தேவையை நிறைவேற்றுவதன் பொருட்டு மனதிற்கிடையிலான உணர்வு பூர்வமான தகவல் பரிமாற்றத்தினை பசி எனலாம்
பசிக்கு நேரம்,காலம்,மனேநிலை எதுவுமே தெரியாது.
இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.

இலக்கை ஒன்றை அடையவேண்டும் எனில், 
பசி இருந்தால் மாத்திரம் அதை அடைவதற்கான ஆர்வமும் தேவையும் தேடுதலும் வரும். ஆகவே ஒவ்வொறுவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பசி இருக்கத்தான் செய்கிறது.

பசியின் வகைகள்

 1. வயிற்றுப் பசி (உணவு,குடிவகைகள்)
 2. அறிவுப் பசி (பல கண்டுபிடிப்புகளின் மூல காரணம்)
 3. காமப் (உடல்) பசி (பெண்ணுடன் பாலுறவு)
 4. காதல் பசி (மனிதனுக்கு மனிதன் மாத்திரம் ஏற்படுவது)
 5. பணப் பசி (பணத்தை பெறும்முறைகள்)
 6. பதவிப் பசி (பதவியை தக்கவைத்துக்கொள்ளள்)
 7. ஆண்மீகப் பசி (இறைவனின் நாமத்தை திணிக்கும் முறை)
 8. பக்திப் பசி (இறைவனின் நினைப்புடன் இருத்தல்)
இப்படியாக பசியினை வகைப்படுத்தலாம்

மேலே கூறப்பட்ட ஏதேனும் ஒரு பசி வந்தால்

 1. தன்மானம் எங்கே பறந்துவிடும்.
 2. தனது குலம் என்ற நினைப்பு எங்கே போய்விடும்
 3. கல்வி கரைந்துவிடும்.
 4. வாக்குறுதிகள் வலிமை இழந்துவிடும்
 5. அறிவுடைமை பெறுமதி அற்றதாவிடும்
 6. தானம் எண்ணம் தலைக்குள் எட்டாது
 7. இறையன்பின் தேடுதலுக்கு இடமளிக்காது
 8. திருவினையாக்கும் முயற்சி கூட பின்னளிக்கப்படும் 
 9. அன்பு> பண்பு> அரவணைப்பு> அனைத்தும் காற்றோடு காற்றாகிவிடும்
 10. இனிய வார்த்தைகள் எங்கோ தொலைந்து விடும்

ஆகவே பசியானது மிகக் கொடுமையானது.

 பசி பழமொழிகள் 


 • 'பசி வந்தால் பத்தும் பறக்கும்'
 • 'பசி ருசி அறியாது'
 • 'உண்பது நாழி உடுப்பது முழம்'
 • 'ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலையாக்கும்'
 • 'காஞ்ச மாடு கம்புல விழுந்தது மாதிரி முழுங்குகின்றான்'
 • 'யானைப் பசிக்கு சோளப் பொறியா?'
 • 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது'
 • 'கையக் கடிச்சா கறி நெல்லக் கொறிச்சா சோறு'
 • 'பசித்துப் புசி'
 • 'கஞ்சி கண்ட இடம் கைலாசம்   சோறு கண்ட இடம் சொர்க்கலோகம்'
 • 'உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு'
 • 'காங்காதவன் கஞ்சியைக் கண்டானாம்    அதை ஓயாமல் ஓயாமல் ஊத்திக் குடிச்சானாம்'
 • 'கண்டதைத் தின்றவன் குண்டனாவான்'
 • 'தானாத் தின்னு வீணாப் போகாதே'
 • 'பங்கித் தின்னா பசியாறும்'
 • 'குண்டி வத்தினாக் குதிரையும் புல்லுத் திங்குமாம்'

பசி சம்பந்தமான திருக்குறள்கள்


•ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவர் ஆற்றலின் பின் (225)

•அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. (944)


ஓளவைப் பாட்டியின் பசி

'கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை'

"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்". -நல்வழி


வயிற்றுப்பசி (பசிவேட்கை)

வயிற்றில் பசி குறித்த உணர்வு அதாவது பசி வேட்கை என்பது இரத்தத்தில் சக்கரையின் அளவு குறையும்போது ஏற்படுவதாகும்.அதாவத கடைசியாக எடுத்த உணவு செரித்து கி;ட்டத்தட்ட 712 மணித்தியாலங்களின் பின் ஏற்படுவதாகும் இக் காலகெடு மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.

வயிற்றுப் பசியை வெறுப்பவர்கள்

 • நேயாளிகள்
 • சித்தர்கள்
 • கதீர் வீச்சு சிகிச்சை பெறும் புற்று நோயாளர்கள்
 • சுவையான (ருசியான) உணவு கிடைக்காதவர்கள்
 • பிடிவாதக்காரர்கள்


வயிற்றுப் பசியை விரும்புவர்கள்

 • குழந்தைகள்
 • கடின உழைப்பாளிகள்
 • மகப்பேற்று தாய்மார்கள்
 • மாணவர்கள்.
 • அம்மாவின் சமையல்

நன்மைகள்
 • செரிமானம் நடந்துள்ளதை அறியலாம்.
 • சுறு சுறுப்புத்தன்மை அதிகரிக்கும்
தீமைகள்

 • உடலை பருக்கச் செய்யும்>அதிக எடை
 • இரத்தத்தில் சக்கரை>கொழுப்பு தன்மையை கூட்டும்
 • பணச் செலவை அதிகரிக்கும்(வைத்தியம்>உணவு)
 • சேம்பலைக் கூட்டும்No comments:

Post a Comment

adw