சொர்க்கம் , நரகம் |
சிறு கதை ஒன்றினால் விளக்கம் தரப்பட்டுள்ளது
ஓர் முதியவர் தனது பேரனிடம்.:
பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.
பேரன்: அது எப்படி தாத்தா?
முதியவர்:
- மது அருந்த பணம் வேண்டும்
- சிகரெட் புகைக்க பணம் வேண்டும்
- கூடாத இசை கேட்க பணம் வேண்டும்
- பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்
- சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்,
ஆனால் மகனே!
சொர்க்கம் செல்வது இலவசம்
- இறைவனை ஆராதிக்க பணம் தேவையில்லை
- விரதமிருக்க பணம் தேவையில்லை
- பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை
- பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?
இலவசமான சுவர்க்கத்தை நேசிக்கிறாயா?
முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.
No comments:
Post a Comment