Skip to main content

யார் கடவுள்? (God in Tamil)

இவ் நவீன விஞ்ஞான யுகத்தில் விஞ்ஞான முறைப்படி நிருபிக்கப்படுபவைகளே   மக்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆகவே மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டது . ‌
பொதுவாக சொல்லப்போனால் ஒவ்வொரு மனித இனத்துக்கும் ஒவ்வொரு கடவுள் ,மதம். ஆகவே

கடவுள் யார்?

கடவுள் இறைவன்


மனிதரைத் தவிர மற்ற விலங்குகளும் இவ்வுலகில் வாழ்கின்றன அவற்றுக்கு கடவுள் யார்?

பொதுவான ஒரு கேள்வி?
 • கடவுளுக்கு உயிர் உள்ளதா? 
 • அவர் எங்‌கே வசிக்கிறார்? 
 • தனி ஓருவரா? குடும்பக்காரரா?
 • அவர் எப்படி எம்மை ஆளுகிரார்?
 • என்னென்ன அறிவுகளுடையார்?
 • கடவுள் யாரிடம் இருந்து சக்தியை பெறுகிறார்?
 • கடவுள் யார்? தெய்வம் யார்? இறைவன் யார்?
 • ஏன் கடவுளை சிலைகள் ,படங்கள் மூலமாகவும் வெளிப்படுத்துகிறார்கள் (இறந்தவர்களை ஞாபகப்படுத்தும் செயல் முறையை ஒத்தாகவுள்ளது )
 • கடவுள் எத்தனை வடிவங்களை எடுப்பார்?
 • விவேகானந்தரின் சரித்திரத்தில் அவர் கடவுளை பார்த்தார் என்கிறார்கள் ? ஏன் சாதாரணமான எம்மால் பார்க்க முடிவதில்லை ஆனால் கடவுள் எம்மை எப்பொழுதும் பார்கிறார் என்கிறார்கள் ?
 • குளிர்? சூடு ? தெரியுமா?
 இப்படியாக கேள்விக்கனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம் விடை நிச்சயமாக புத்தகங்களின் உள்ளவை,கேள்விப்பட்டவையாகவோ இருக்கும் அனுபவரீதியான விடை இருக்காது.

தமிழ் மொழியைப்பொறுத்த வரை கடவுள் என்பது கட+உள் ஆகும்.

தமிழ் இலக்கண வல்லுனர்களின் கூற்றுப்படி மனதை கடப்பதை  குறிப்பிடுகிறார்கள்.

மதங்களைப் பொருத்தவரை மதத்தலைவர்கள் கடவுளுக்கு அருகில் உள்ளவர்கள் என்ற பிரமை பெரும்பாலான மக்கள் மத்தியில் உள்ள நிலைப்பாடாகும் (அவர்களும் சாதாரண மனிதர்களே) இதனால் பலர் ஏமாற்றப்படுகிறார்கள்
மதம் உருவாக்கப்பட்டது மனித மனத்தை கட்டப்படத்தவும், செம்மைப்படுத்தவுதான் ஆனால் தற்காலத்தில் தலைகீழாக உள்ளது.
கடவுள் என்ற பெயரில் பல ஏமாற்று வித்தைகளை காண்பித்து பிழைக்கிறார்கள் ஆனால் யார் கடவுள் என்பது அவர்களுக்கும் தெரியாது என்பது உண்மை.

அறிஞர் அண்ணாத்துரை அவர்களின் கருத்துப்படி

"பக்திக்கு பலி கேட்பதா கடவுள்?
 பசிக்கு உணவு அளிப்பதா கடவுள்? "

யார் கடவுள் ?
என்ற கேள்விக்கு எனது விடை

மனம்.


Comments

Popular posts from this blog

வாழ்க்கை தத்துவம்

வாழ்கை தத்துவம் தற்போதுள்ள மனித அறிவின் படி ஒரே ஒரு தடவைதான் எமது வாழ்கையாகும்.இவ்வாழ்க்கையானது ஒரு குறுகிய காலப்பகுதியை வரையறையாக கொண்டுள்ளது.(ஒவ்வொரு மனிதனுக்குமான இக்கால அவகாசம் சமமாக இருப்பதில்லை) இக்கால இடைவெளிக்குள் , வாழ்க்கை என்றால் என்ன? ஏன் வாழவேண்டும்?ஏன் உறவுகளை மதிக்க வேண்டும்.?ஏன் உண்மையாக இருக்கவேண்டும்?யாரை முழுமையாக நம்புவது?ஏன் கோபம் வருகிறது? ஏன் சிந்திக்கின்றோம்?எதுவும் சில காலம் தான் எனத் தெரிந்தும் பொறாமைப்படுகிறோம்?எப்படியோ ஒரு நாள் உடலை மண்ணுக்கு கொடுக்க இருக்கிறோம், ஏன்? இப்படியாக பல கேள்விகள் வாழ்க்கை சம்பந்தமாக எழுகின்றன?
வாழ்கை சம்பந்தமான கேள்விகளுக் விடையை பார்ப்போமானால் மனம் இதன் பிரதிபலிப்பே வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைக்கும் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே இருந்துள்ளதென்பதை அறியமுடிகிறது. இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் வெற்றியை நேக்கியே தங்களுடைய அன்றாடபொழுதைக்கழிக்கிறார்கள். ஆனால் பல சோதனைகளுக்கூடாக வெற்றியும் தோல்வியும் மாறி மாறி  வருவதை நன்றாக அவதானிக்கமுடிகிறது. இதில் மனத்தின் வேலை என்ன? வாழ்கையில் வரும் சோதனைகளை மனம் கையாளுகிற விதத்தைப்பொறுத்து  வ…

சிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்

சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில்  ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?)

சிரிப்பு என்பது இதழ்கலாள் மறைக்கபட்ட சொர்க்கம். சிரித்தால்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள் - சிரிப்பின் தத்துவமாகும்.
சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித்தொடர்புள்ளது இதன் காரணமாக சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும்கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி நேர் மறையான (Positive) எண்ணங்களை பரப்பும். சோக அலைகள் நம்மைச்சுற்றி எதிர் மறையான (Negative) எண்ணங்களை பரப்பும்.  ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்

அதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவுகோலாகவும் சிரிப்பு உள்ளது.

சிரிக்கும்போது விஞ்ஞான ‌அறிவியல் 
"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது.
இதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

வாழ்க்கையும் கணிதமும்

"கணிதம் என்பது எவ்வுலகத்துக்கும் பொதுவானதொரு மொழியாகும்"

நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நபர்களின் நடவடிக்கைகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஆயகலைகள் அறுபத்திநான்கில் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே அல்லது ஏதேனுமோரு கலையில் சிறிதளவாயினும் திறைமையாக இருப்பதை நன்கு அவதானிக்கலாம்.

ஆனால், பொதுவாக கணிதக்கலையானது  எல்லோருடைய அன்றாட வாழ்வில் இணைபிரியாதுள்ளது,

எப்படி சாத்தியமாகும்?

கணிதத்தின் அடிப்படைத் தத்துவமானது,
கூட்டல்கழித்தல்பெருக்கல்வகுத்தல்
இவ் நான்கு தத்தவத்தை விழிப்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக்கனியாகவே வைத்துக்கொள்ளாம்.

எப்படி என்று உதாரணம் மூலம் பார்ப்போம்?
கூட்டல்-நல்ல நபர்களை,நல்ல பழக்கவழக்கங்களைகழித்தல்-கெட்ட விடயங்களைபெருக்கல்-நியாய முறையில் பணத்தை ஈட்டுதல் (இதனால் மனமகிழ்ச்சிக்கு குறைவேயில்லை),வகுத்தல்-காலத்திற்கெற்றாற்போல் நேரத்தை திட்டமிடல். இவ் நான்கு கணித அடிப்படையின் விடைகளை சமன் மூலம் தெரியப்படுத்தலாம்(வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி தோல்விகளை சமன் செய்யவேண்டும்) இவ்கணித இலக்கணத்தை நல்ல வியூகத்துடன் வாழ பழகிக்கொண்டால் எந்நாளும் பொன்னான ந…