Saturday, June 21, 2014

குழந்தைகள்

நாம் யாரை குழந்தைகள் என்கிறோம்?
அதாவது கிட்டத்தட்ட ஆறு வயதுக்குட்பட்டவர்களை குழந்தைகள் எனலாம்.
இவர்கள் வாழ்க்கையின் உண்மைத் தன்மையை உணராதவர்கள்,எந்நேரமும் மகிழ்ச்சியான மனோநிலையைக் கொண்டுள்ளவர்கள்.

குழந்தைகள் வாழ்க்கையை முற்றிலும் புதிதாகப் பார்க்கின்றனர்
எனவே நீங்கள் கற்றுக்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டதாக அர்த்தம் ஆகவே, நீங்கள் உங்கள் குழந்தையோடு புதிதாக உங்கள் வாழ்க்கையைப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும் .

பெற்றேருக்கு இருக்கும் முதற் தலையிடி இக்குழந்தையின் எதிர்காலமே?

அதாவது

  • குழந்தைக்கான கல்வி எப்படி இருக்கவேண்டும்?
  • குழந்தையை எப்படி வளர்க்கவேண்டும்?
  • குழந்தைக்கு எப்படி வழிகாட்டவேண்டும்?

 இப்படி  பற்பல கற்பனைகளோடு உங்கள் வாழ்க்கையை குழப்பத்தில், தடுமாற்றதில்  இருக்கிறது இதற்கு என்ன மருந்து?
அது எங்கே கிடைக்கும்?


பெற்றேர்களே நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை 
  1. உங்கள் குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது.
  2. உங்கள் குழப்ப மனநிலையைக் கொண்டு குழந்தைகள் மனதில் எந்தப் பாதிப்பும் உருவாக்காதீர்கள்
ஏன் என்றால் ?
மற்றவர்கள் உங்கள் குழந்தைக்கு தொல்லை தரக்கூடும் அவர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளை தனிமைப்படுத்த முடியாது.ஏனெனில் உலகமெங்கும் இப்படிப்பட்ட மனநோயாளர்கள் உள்ளனர்.

எனவே பெற்றேர் குழந்தைகளுக்கு செய்யவேண்டிய மிகமுக்கியமானது
 அவர்களை
ஊக்கப்படுத்த வேண்டும்

இதனை நல்ல விழிப்புணர்வோடும்,அறிவுக்கூர்மையோடும் அதற்கேத்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தல்  இதன் மூலம் குழந்தையினுடைய இயல்பான அறிவினை வளர்க்க துணை செய்ய வேண்டும் .

நாம் ஒன்றை நினைவில் வைத்திருக்க  வேண்டும் அதாவது தங்களுடைய வாழ்க்கையை நிறைவேற்றுவதற்கு தேவையான அறிவு எல்லாருக்கும் தரப்பட்டிருக்கிறது.இது  ஒவ்வெரு உயிரினத்திற்கும் பொருந்தும்

குழந்தையை பாதிக்கும் செயல்கள்

  1. உங்களைப் போன்ற அறிவோடு குழந்தை இருக்க வேண்டும் என்ற நினைப்புகள்.
  2. குழந்தை தன் இயல்பிற்கேற்றாற் போல் இருக்க நீங்கள் எதிர்பார்பதில்லை
  3. நீங்கள் புரிந்து கொண்டமாதிரி குழந்தையும் அறிவினை புரிந்துகொள்ள வேணடும்
  4. உங்கள் சிந்தனையை குழந்தை மீது திணித்தல்
  5. குழந்தை கேட்பதெல்லாம் வாங்கிக்கொடுப்பது
  6. குழந்தையை புத்திசாலித்தனமாக பார்பதில்லை

குழந்தையை வளர்க்கும் செயல்கள்

  1. அன்பும் ஆதரவும் குறைவின்றி இருக்கவேண்டும்
  2. ஆனந்தமாக இருக்கத் தக்கதாக  வளர்க்கவேண்டும்
  3. மகிழ்ச்சியாக ,அமைதியாக இருப்பது எப்படி என்று தெரிந்திருத்தல் வேண்டும்
  4. வீட்டில் ஒவ்வொரு நாளும் பதட்டம்,அச்சம்,பொறாமை,கோபம் அற்ற நாளாக இருக்க வேண்டும்

குழந்தையை பெற்றுக்கொள்ள முன் உங்களையே நீங்கள் மாற்றிக்கொள்ளாவிட்டால் குழந்தை அவசியமா? இல்லையா என்று யோசித்து முடிவெடுங்கள் .



No comments:

Post a Comment

adw