Friday, April 7, 2017

ஆச்சரியம் - 7



அன்றாட வாழ்வில் ஏழு வித ஆச்சரியத்தின் மத்தியில் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான் இதற்கு காரணம் ஆசையே
அவையாவன


ஆச்சரியம்
ஆச்சரியம்


மரணம்
மரணம்  என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், 
கவலைப்படாமல்,தன் கடமைகளச்செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம்...

 உலகம் அழிவு
ஒரு நாளில் இவ்வுலகம் அழிந்து போகும்  என்பதை அறிந்த மனிதன், உலகத்தின்மீது ,மோகம்  கொண்டிருப்பது ஆச்சரியம்

இறைவன்
எந்த ஒரு செயலும் இறைவன் விதித்தபடியே நடக்கும்  என்பதை அறிந்த மனிதன், 
கைநழுவிச் சென்றவற்றை  எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியம்.

வாழ்க்கைக்கான தீர்வு
மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை  நம்புகின்ற மனிதன்,அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...

நரக வேதனை
நரக நெருப்பின் வேதனை பற்றி அறிந்த மனிதன்,அது பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் பாவம், தவறு செய்வது ஆச்சரியம்.

வணக்கம்
இறைவன் ஒருவனே என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை
நிறை வேற்றுவது ஆச்சரியம்.

சொர்க்கம்
சுவர்க்கத்தைப் பற்றி அறிந்த மனிதன், உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது ஆச்சரியம்.

No comments:

Post a Comment

adw