Tuesday, September 30, 2014

பொறாமை Envy in Tamil

பொறாமை

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையிலான காலகட்டத்தில் பொறாமைப்படாமல் வாழ்ந்திருந்தால் அவன் கடவுளாவான் ஆனால் அதற்கு இறைவன் சந்தர்ப்பத்தை வழங்குவதில்லை.

ஏன் எனில் அவன் தனது வாழ் நாளில்

  • மனத்தை (ஐம்புலங்களை) கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமையினாலும்
  • பொறுமை இல்லாததாலும்
  • நேரத்தை வீணடிப்பது
  • மிருகத் தன்மைக்கு இடங்கொடுப்பதுமே காரணமாக இருக்கிறது.

உலகம் உருவான காலத்திலிருந்தே பொறாமை என்னும் உணர்வின் காரணமாக எவ்வளவோ அட்டூழியங்கள், அழிவுகள் நடந்துள்ளதென்பதை வரலாறுகள் கூறுகின்றன.

உதாரணமாக பொறாமையின் நிமிர்த்தம் திருவள்ளுவரின் வரலாறு கூட எமக்கு இல்லை காரணம் மக்களுக்கு அறியாமையை விளக்கியதனால் அக்காலத்தல் ஆட்சிசெய்த மன்னர்களுக்கு எதிரான விளைவுகள் மக்களால் வைக்கப்படும் என்ற காரணத்தினால் அவரின் மற்றைய படைப்புக்கள் அழிக்கப்பட்டதும் திருக்குறளுக்கு  காலம் கடந்த அனுமதி கிடைத்ததாகவும் அன்மையில் பத்திரிகையென்றில் வாசித்த ஞாபகம் உள்ளது.

ஏன் இராமாயணமும் ,மகாபாரதமும் உருவாவதற்கு அடிப்படை காரணமே பொறாமையாகும் இப்படியாக பொறாமை சம்பந்தமான கதைகளை வளர்த்துக் கொண்டு செல்லாம்.
பொறாமை என்னவென்று அலசி ஆராய்ந்துபாருங்கள், 
பொறாமைக்கு அடைக்களம் கொடுத்தவரை அது எப்படி சித்திரவதைசெய்து படுகுழிக்குள் தள்ளிவிடுவதை.

ஆகவே பொறாமை என்னும் உணர்வாணது மனித பிறப்பிலிருந்தே இறப்பு வரைக்கும் வரும் உணர்வாகும் ,இவ் பொறாமை உணர்வினால் ஏற்படுபவை
  1. பிறரை நோகடித்தல்,எதிரியாக பார்த்தல்
  2. நினைத்ததை செய்து முடிக்காமை
  3. உறவுகளை மதியாமை,உறவை நாசமக்கிவிடுதல்
  4. தன்னை தானே பெரிதாக எண்ணுதல்
  5. அவநம்பிக்கை ஏற்படுதல்
  6. பொறாமையால் கோபம் வருதல்
  7. தாழ்வுமனப்பான்மை
  8. பந்தம் என்பதன் விளக்கமின்மை
  9. வாழ்க்கைக் காலத்தை கணிப்பிடாமை
  10. நோய்நொடிகள் உருவாதல் (நீரழிவு,உயர் குருதி அமுக்கம், இரத்தத்தில் நஞ்சு ,கொழுப்புக்கள் சேருதல்)

பொறாமைக்கான முக்கிய காரணம்

  1. பணம்
  2. அழகு
  3. அறிவு
  4. புகழ்
என்பன நான்குமே மிகமுக்கியமானதாகும்

1 comment:

adw