Monday, August 11, 2014

தந்திரோபாயம் - தத்துவங்கள் (Tricks in Tamil)

தந்திரோபாயம்  என்பது ஏதோ ஒருவிதத்தில் இன்னெருவரை ஏமாற்றுதல்,நம்பிக்கை துரோகம்,பழிவாங்குதல் போன்ற செயல்களுக்கு தன்னில் எந்தவெரு குற்றமும் நேரடியாக தாக்காத வண்ணம் (கு‌ழந்தைத் தனமாக,மொக்குத் தனமாக ) இருக்கதக்கதாக செயல்படும் செயல் முறையாகும்.


வாழ்க்கையில் தந்திரோபாயம் இடம்பெறும் சந்தர்ப்பங்கள்

  1. அரசியல்-நாம் கண்கூடாக ஒவ்வொரு நாளும் பார்த்து தேர்தல் காலத்தில் பலியிடல்
  2. சினிமா-வியக்கவைக்கும் காட்சிகள்
  3. வியாபாரம்-விளம்பரங்கள்,கண்ணைக்கவரும் விதத்தில் பொருட்களை உற்பத்தி செய்தல்
  4. சமூக வலைத்தளங்கள்-நேரத்தை வீணடித்தல், வியாபார நோக்கம் (எமக்கில்லை வலைதளத்தின் சொந்தக்காரருக்கு)
  5. மந்திர ஜாலம் , மாஜா ஜாலம் -குறுகிய நோரத்திற்குள் எம்மை ஏமாற்றுத் வித்தை
  6. கணினி-சில மென்பொருட்களின் உதவியால் செய்யப்படுகிறது
  7. கணிதம்-சில சிக்கலான வற்றை கணீத சமன்பாடுகள் மூலம் தீர்வுகாணல்
  8. இயல்,இசை,நாடகம்-சில அசைவுகள் ,சத்தங்களை அடிப்படையாகக் கொண்டவை
  9. விளையாட்டு-வெற்றியை தனதாக்கி கொள்ள செயல்படும் குறுக்கு வழிகள்
  10. மருத்துவம்-மருந்துகள்,வேதியல் முறை மூலம் நோயை குணப்பபடுத்துதல்
  11. புகைப்படத்துறை-சொல்லத்தேவையில்லை அன்றாடம் கேள்விப்படும் விடயம்

இராமாயனத்தில் தந்திரோபாயம்

இராமாயனப் போர் முடிவுற்று சில காலங்களின் பின் சீதை தனது கற்பை நிரூபிப்பதற்கு  தீ குளித்தால் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இதற்கு யாரின்  பழிவாங்கும் தந்திரோபாயமாக இருக்கலாம்.
உங்களுக்கு விடை தெரியுமா?

எனக்குத் தெரிந்த விடை என்னவெனில் 
இராமாயணப் போரில் இராவணன் வீர மரணம் அடைந்த பிற்பாடு இராவணனின் தங்கை சூர்ப்பனகை முடிவெடுத்தால் சீதையை எப்ப‌டியும் பழிவாங்க வேண்டும் மென்று.அவள் போட்ட நாடகத்தில் (தந்திரோபாயம்) சீதை பலியானால் எப்படி என்றால்?.

ஒரு நாள் அழகிய நங்கையாக உருமாற்றம் பெற்று சீதையின்  நட்பும் ,நம்பிக்கையும் நெடுநாட்களாக பெற்றுக்கொண்ட பிற்பாடு.

ஒரு மாறுவேடத்திலுள்ள சூர்ப்பனகை சீதையிடம் கேட்டால் எனக்கு இராவணணின் உருவத்தை வரைந்து தரும்ப‌‌டி (சீதை ஓவியம் வரைவதில் நிகரானவள்) சீதை அதை மறுத்தாள்  ,பின் சூர்ப்பனகை  தனது சுயரூபத்தை காண்பித்துக்கேட்டால் நான் கேட்பது எனது அண்ணணின் உருவத்தை ,இவ்வுலகில் இராவணன் தனது சுயரூபத்தை  உனக்கு மட்டுமே காண்பித்தான் அதைவிட நீ நல்ல ஓவியக்காரி எனக்கு தயவு செய்து அண்ணனின் உருவத்தை வரைந்து தரும்படியும் இல்லாவிடில் இவ்விடத்தில் தற்‌கொலை செய்வதாகவும் ‌சொன்னால்,பின் சீதை இராவணனின் உருவ‌த்தை வரையத் தொடங்கினாள்.

வரைந்து கொண்டிருக்கையில் இராமன் சீதையை கூப்பிட்டார் ,சீதை தான் வரைந்து கொண்டிருந்த இராவணனின் ஓவியத்தை தனது தலையணையின் கீழே வைத்து விட்டு இராமர் நோக்கிச் சென்றால். இதற்கிடையில் சூர்ப்பனகை போட்டுவாங்கிவிட்டல் .

இராமரின் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் தான் வரைந்து கொண்டிருந்த இராவணனின் ஓவியம் தனது தலையணையின் கீழ் உள்ளதை ஒப்புக்கொண்டாள்,

இராமன் தன் கற்பின் மீது சந்தேக்ப்பட்ட காரணத்தினால்
சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக தீ குளித்தால் என்றும் அவள் மீண்டும் தனது தாயுடன் அக்கியமானால் என்றும் ‌இராமாயணக்கதை ஒன்று உள்ளது.

இதில் இருந்து தனது தந்ரோபாயத்தினால் சீதையின் நட்புக்கு ,நம்பிக்கைக்கு சூர்ப்பனகை குற்றம் இ‌ழைத்தாள்

ஏன் பாரதக் கதையிலும் கூட பல தந்திரோபாயங்கள் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது

கோச்சடையான் திரைப்படத்தில் கூட தந்திரோபாயத்தினால் தான் கோச்சடைன் ரணதீரன் இலட்சியத்தை நிறைவேற்றயதை அறியலாம்

புகைபடத்துறையில் உள்ள சில தந்ரோபாயம்

தந்திரோபாயம்

தந்திரோபாயம்

தந்திரோபாயம்


No comments:

Post a Comment

adw